புதன், 9 ஏப்ரல், 2014

மறக்கப்பட்ட மற்றும் மறுக்கப்படும் வரலாறு (History forgotten and denied)


தமிழரின் வரலாற்று பயணம்
ந்தியாவின் முதல் கப்பல் படையை நிறுவி தெற்காசியா வரை தன் மகன் சோழ கொடி நாட்ட வழி...வகுத்த ராஜ ராஜா சோழன் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம் !.இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது."திருநெல்வேலி" அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது !! .

உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் உங்களுக்காக .இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படையை நிறைய குழுக்களை கொண்டிருந்தது . அனைத்து குழுவிற்கும் தலைவர் "அரசர்". இதில் " கனம் " (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ) என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது ,இதை நிர்வகிப்பவர் " கனாதிபதி " . . "கன்னி" (போர் நேர / சிறப்பு பணிக்காக குழுமுதல்) ,இதை நிர்வகிப்பவர் உயரிய "கலபதி", "கன்னி" என்பது தமிழில் "பொறி" என்று கூட பொருள் படும் ,இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து ( எலி பொறியில் சிக்குவதைப்போல ) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் ! .அடுத்து "ஜதளம்" சுருக்கமாக "தளம்" (நிரந்தரப்போர் பிரிவு ) இதை நிர்வகிப்பவர் "ஜலதலதிபதி",இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது. "மண்டலம்" (பாதி நிரந்தர போர்ப்பிரிவு ) இதை நிர்வகிப்பவர் "மண்டலாதிபதி" இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும் , இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள் ! ."கனம்" (நிரந்தர பிரிவு ) 100 முதல்150 கப்பல்கள் கொண்ட பிரிவு , மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம் ! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது !."அணி" இதை நிர்வகிப்பவர் 'அணிபதி" மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது ! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது. "பிரிவு" மிக முக்கியமான பிரிவு இது , இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால் " கீழ்பிரிவு-அதிபதி / தேவர் " என்று அழைத்தனர் .இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது,உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்று. இந்த கப்பல் பட்டையை வைத்து தான் "இலங்கை","இந்தோனேசியா","ஜாவா","மாலைதீவு",மலேசியா",சிங்கப்பூர் " போன்ற அனைத்து நாடுகளையும் நம் மன்னன் கைப்பற்றினான் ! .இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன் ! .இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளனவா என்பது சந்தேகம் !! இன்னொரு ஆச்சர்யமான செய்தி, இன்று புழக்கத்தில் இருக்கும் " NAVY " என்ற ஆங்கில வார்த்தை "நாவாய்" என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும் !! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை "தமிழர்களுக்கு" தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும் ? சிந்தியுங்கள் !!