புதன், 9 ஏப்ரல், 2014

தமிழ்ப் பழமொழிகள்

* ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.

* ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.

* ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.

* ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

* ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
* ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?

* ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.

* ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

* ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.

* ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
* ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.

* ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.

* ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

* ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.

* ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
 ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

* ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்

* ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.

* ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
* ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

* ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை

* ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

* ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?

* ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
* ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.

* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது

* ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
* ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.

* ஏழை என்றால் எவர்க்கும் எளிது

* ஏழைபேச்சு அம்பலம் ஏறாது

* ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
* ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை

* ஏரி நிறைந்தால் கரை கசியும்.

* எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.

* ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.

* ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
* எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.

* எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்

* எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.

* எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.

* எறும்பு ஊர கல்லுந் தேயும்.

* எறும்புந் தன் கையால் எண் சாண்
* எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?

* எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

* எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்

* எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

* எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
* எலி அழுதால் பூனை விடுமா?

* எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.

* எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்

* எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.

* எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?

* எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது

* எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா

* எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?

* எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

* எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.

* எருது நோய் காக்கைக்கு தெரியுமா?

* எதார்த்தவாதி வெகுசன விரோதி.

* எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.

* எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.

* எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

* எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

* எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,

* எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

* எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.

* எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.

* எண்ணை முந்துதோ திரி முந்துதோ?

* எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?

* எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.

* எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?

* எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

* எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?