புதன், 9 ஏப்ரல், 2014

கடவுளை அடையும் மார்க்கத்தை நமக்கு அறிவிக்கும் குருவையே நாம் கடவுள் என எண்ணி வழிபட்டு சிவப்பரம் பொருளை மறப்பது எவ்வகையில் நியாயம்?

உலகத்தின் முழுமுதல் பொருள் ஒன்றே. அதை நாம் சிவம் என அழைக்கிறோம். இந்த சிவமே பல தெய்வ உருவில் காட்சியளிக்கும். எந்த தெய்வ உருவை வணங்கினாலும் சிவம் என்னும் முழுமுதல் கடவுளை வணங்கியது போன்றதுவே. 

சைவர்களாகிய நாம் சிவப்பரம் பொருளையும் அதன் பிறவடிவங்களையும் வணங்கி இறையருள் பெறுகிறோம். இந்த இறைவனை வழிபடுவதற்கு உரிய மார்க்கங்களை அறிவதற்காக குருவை நாடுகிறோம். குரு என்பவர் தன் கல்வி கேள்விகளினாலும் உரிய பாதையில் வாழ்வை மேற்கொண்டமையாலும் இறைவனை அடைதலுக்குரிய மார்க்கத்தை காட்டுவார். அந்த மார்க்கத்தை அறிந்த நாங்கள் சிவப்பரம் பொருளை வழிபட்டு உய்தி அடைவதையே சைவசமயம் நமக்கு கூறுகிறது.

ஆனால் கடவுளை அடையும் மார்க்கத்தை நமக்கு அறிவிக்கும் குருவையே நாம் கடவுள் என எண்ணி வழிபட்டு சிவப்பரம் பொருளை மறப்பது எவ்வகையில் நியாயம்?

பக்தருக்கு வழிகாட்டும் கடமை கொண்ட குரு, தானே கடவுள் என்ற மாயையை அந்தப் பக்தர்களுக்கு உருவாக்கி அவர்களை சிவப்பரம் பொருளையை மறக்க வைத்தல் எவ்வகை நியாயம்?

இந்த உண்மைகளை வெளிப்படுத்த இந்துசமயப் பிரசங்கம் செய்வோர் தயங்குவது எவ்வகை நியாயம்?