செவ்வாய், 13 மே, 2014

அறுசுவை மருத்துவம்:


காரம்-உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணற்சிகளை கூட்டவும், குறைக்கவும் செய்யும்.
கசப்பு - உடம்பிலுள்ள உதவாத கிருமிகளைஅழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக் கட்டுப்படுத்தும்.
இனிப்பு - உடம்பு தசையை வளர்ம்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
புளிப்பு - இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக் கூட்டும்.
துவர்ப்பு - இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
உப்பு – நினைவாற்றலை அதிகப்படுத்தும்; எலும்புசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்; குருதி (இரத்த) அழுத்தம் (நோய்) அதிகமாகிவிடும்.
தயிர் புளிப்பு என்று கூறுவர்; ஆயின் கசப்புச் சுவையின்பாற்படும்; தயிர் சளி ஏற்படுத்தாது; அதனுடன் உப்பு சேர்ந்தால் மட்டுமே அவ்வளவு தயிரும் (சிலேட்டும வாகினர்க்கு) சளியாக மாறும். பாக்கு இரத்தம் மிகச் செய்யும்; அதிகம் சேர்த்தால் இரத்தம் முறியும். கசப்பு தோல் நோய்களைப் போக்கும்; ஆயினும் தோல் நோய் போக்கும் மருந்துகளைச் சாப்பிடுகையில் பாகல்காய் கூடாது. நால்தோறு சாப்பிடும் உணவில் நாம் கசப்பும் துவர்ப்பும் சேர்ப்பதே இல்லை. நாள்தோறும் அளவாகச் சேர்த்துப் பாருங்கள் -நோய்கள் அண்டாது