புதன், 9 ஏப்ரல், 2014

சைவ தமிழின் தொன்மை

சைவ தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட. ஆனாலும் உலகு முழுதும் எம் தொன்மையையும் வல்லமைகளையும் கண்டு எப்படியாவது சைவதமிழினத்தைப் பிரித்து ஆண்டு நிரந்தர அடிமைககளாக்கிப் பயன் பெற்று தம் வாழ்வை மேம்படுத்த வசதியாக இனத்தின் கட்டுக்கோப்பைப் பூண்டோடு அழித்துவிடக் கங்கணம் கட்டி நிற்கிறது. நாம் எமது வல்லமைகளைப் புரிந்து கொண்டு பிரயோக சாத்தியக்கூறு உள்ள பொதுவான தளத்தை அடையாளங் கண்டு அதில் நிலை எடுத்து உலகை ஆள முடிந்தாலும் ஆச்சரியம் இல்லை.உதாரணமாகக் கல்வி தமிழருக்கு பொதுவான தளமாக இருந்தாலும் கூட அட்சரங்கள் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி கற்கும் வாய்ப்பைத் தவிர்த்து விட்டு படித்த முட்தாள்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற படிப்பித்தல் முறைகளையே நாம் நாடி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
உலகின் முதல் நாகரிக மாந்தன், எத்தனை ஆண்டுகளானாலும் அழிய முடியாத பண்பாட்டைக் கொண்டவன், உலகின் முதல் நகரை அமைத்தவன், உலக மக்களுக்கு எல்லாவற்றையும் கண்டுபிடித்துக் கொடுத்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக உலகிற்கு உன்னத மொழியை தந்தவன் என்று சைவதமிழனின் பெருமை பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். அத்தோடு உயிர்மெய்த் தத்துவத்தைக் கண்டறிந்து உலக மக்களின் உயரிய வாழ்வுக்கான வழிவகைகளைச் சொன்னவனும் சைவ தமிழனே என்றால் மிகையாகாது.
ஆனாலும் நாம் எம் சிறப்பை அறிந்துவிடாதிருக்க எம்மையே முட்டாள்களாக்கி, திசைதிருப்பி குமரிக்கண்டம் என்னும் ஒரு சிறிய வட்டத்துள் சுழல விட்ட மேற்குலகின் தந்திரமான செயலை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை. ( நம் வரலாற்றை அழிக்க நினைத்தவர்கள் செய்த சதி)

அதற்க்கு சாமரம்வீசிக்கொண்டு சைவதம்மினத்தின் சிறப்பறியாது தம்மைத்தாமே சிறப்புறச் செய்வதாக எண்ணித் தாழ்த்தும் தமிழரை நினைத்து வேதனை கொள்ளாதிருக்கவும் முடியவில்லை.
நான் எழுதியதன் நோக்கம்

, உலகில் உன்னதமாய் வாழ்ந்த சைவ இனம் இன்று உலகின்முன் உருக்குலைந்து கிடந்தும் ஒருவர்கூட எம்மினத்தின் தொன்மையை மற்றவர் முன் நிறுவவோ அதைக் காக்கவோ முனையவில்லை. நாம் மட்டுமே எமக்காகப் போராடி எம்மை முன்னிறுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். ஒரு சிறிய தீப்பொறியே பெருநெருப்பை உண்டாக்க வல்லது. கற்றவர்கள் நிறைந்திருக்கும் தமிழ் சமூகத்தில் கற்றவர்களே சைவ தமிழுக்கு எதிரிகளாய் உள்ளனர்.
இதை வாசிப்போருள் ஒருவரோ ஒரு சிலரோ எம் தொன்மையைப் புரிந்துகொண்டு ஏதாவது செய்வதற்கு முன்வர மாட்டார்களா?? என்னும் நப்பாசைதான் என்னை இதை எழுதத் தூண்டியது. சங்கம் வைத்துத் சைவதமிழ் வளர்த்த சைவ தமிழர் தம் அடிமனதில் இன்னும் தம் இனத்தை உயர்த்திப் பார்க்கும் ஆசை கொண்டிருப்பார். அவர் தம் தொன்மையைக் கண்டறிந்து உலக நாடுகள் முன் அதை நிறுவித் சைவ தமிழரை மீண்டும் தலை நிமிரச் செய்ய வேண்டும் என்பதே என் அவா.-


தமிழா உனக்குப் பிச்சைப்போட யாரும் இல்லை : தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர். அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை. இதை உணர்ந்தால் நீயும் உயரலாம், உன்னோடு சேர்ந்த சிவத்தமிழ்ப் பண்பாடும் மேன்மையுறும்.

வீரம் செறிந்த மண்ணிலே இன்றைய நிலை என்ன? தமிழுக்குச் சோதனை.தமிழனுக்கு மாற்றான் புகுந்து இனத்தால் மொழியால் சுயநலத்தால் நம்மை வேறுபடுத்தி சின்னா பின்னுமாய் உருவாக்கிக் கொண்டு ஆட்டிப் படைக்கிறார்கள்.விடிவு கேளவிக்குறியாக உள்ளது.