புதன், 9 ஏப்ரல், 2014

வடக்கில்

இந்த பூமியானது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தனித்தனி கண்டமாக இல்லாமல் ஒரே நிலப் (Pangaea) பகுதியாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக (Continental Drift) விலகி இப்போதைய நிலக்கு வந்துள்ளன. இன்னும் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் பார்த்தால் ஆப்பிரிக்கா ,அமெரிக்கா ஆகிய கண்டங்கள் இப்போதைய நிலையில் இருக்காது. ஆனால் உலகப் படத்தைப் பார்த்தீர்களானால் ஒரு வியப்பான விஷயத்தைக் கவனிக்கலாம். ஒரே நிலப் பரப்பு விலகி விலகி சென்றபோது ஏன் வடக்கே மட்டும் அதிக நிலப்பரப்பு (land mass) போயின? தெற்கே ஏன் அதிகம் கடற்பரப்பு (oceans) வந்தன? ஏன் எல்லா கண்டங்களும் கீழே குறுகியும் மேலே பருத்தும் இருக்கின்றன. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா ஆகிய நிலப் பரப்பைப் பாருங்கள். வடக்கில் பெரிய நிலப் பரப்பும் தெற்கில் சுருங்கி தீபகற்பமாகவும் (peninsular) இருக்கும். ஏன் இப்படி வந்தது என்றால் இதுவரை யாரும் விடை சொல்ல முடியவில்லை.

பூமியில் வடக்கில் காந்த சக்தி அதிகம் இருந்ததால் கண்டங்களை இப்படி மேல் நோக்கி இழுத்தனவா? அல்லது தன்னிச்சையாக வடக்கில் நிலப் பரப்பு கூடியதாலங்கே காந்த சக்தி அதிகரித்ததா? இதற்கு விடை கிடைத்தாலும் விடை கிடைக்காவிட்டாலும் வடக்கில் நிலப் பரப்பு குவிந்திருப்பதை யாரும் காணலாம்.

ஆக பூமி என்னும் காந்த உருண்டைக்கு மதிப்பு கொடுத்து அதனுடன் மோதாமல் இருக்க வேண்டுமானால் வடக்கைத் தவிர வேறு திசையில் தலை வைத்தும் உறங்கலாம். கிழக்கு திசையிலோ தெற்கு திசையிலோ தலைவைத்துப் படுப்பது உத்தமம்.
புனித திசை வடக்கு
இந்துக்களுக்கு வட திசை மீது மதிப்பும் மரியாதையும் அதிகம். கையிலாயமும் மேருவும் இருக்கும் புனித திசை அது. உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க விரும்புவோர் வட திசை நோக்கி அமர்ந்து உயிர் விடுவர். சங்க இலக்கிய நூல்கள் கோவூர்க் கிழாரும் கோப்பெருஞ் சோழனும் உண்ணாநோன்பு இருந்ததை வடக்கிருத்தல் என்றே அழைப்பர். மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் வட திசைப் பயணம் நோக்கிப் பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர்விட்டதையும் படித்திருப்பீர்கள். இதை மஹா பிரஸ்தானம் என்று அழைப்பர்.