விஞ்ஞான உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஞ்ஞான உண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஜனவரி, 2016

மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என்று சொல்வது ஒருகுற்றமா?


நமது அன்றாட வாழ்க்கையில் பால் மிக இன்றியமையாதது.. நமது குழந்தைகள் சிறிதளவேனும் ஆரோக்கியமாக இருப்பது பசும் பாலினாலையே.. தற்போது பால் உற்பத்தி குறைவினால், பல கலப்படங்கள் பாலில் வந்துவிட்டன.. ஏற்கனவே அரிசி முதற்கொண்டு, காய்கறிகள், மளிகை பொருட்கள் என அனைத்திலும் ரசாயன கலவைகள்.. அடிப்படை தேவையான தண்ணீரும் வற்றிய நிலை அல்லது சுத்திகரிப்பு என்ற நிலையில், அதன் சத்துக்கள் வடிகட்டப்பட்டு தான் குடிக்கின்றோம்.. இதனாலையே முன்னோர்களின் சாராசரி வயதான நூறிலிருந்து குறைந்து, தற்போது அறுபது வயது வரை ஆரோக்கியமாக வாழ்வதே பெரும்பாடு..
உழுவதற்கு தான் தற்போது டிராக்டர் உள்ளதே, பிறகு காளை மாடு எதற்கு என்று சிலர். ஏழை விவசாயிகளுக்கு இன்றும் பல இடங்களில் உழுவதற்கு மாடுகளே உதவியாக உள்ளன. மற்றும் காளை மாடுகள் அன்றி அந்த இனங்கள் எப்படி உற்பத்தியாகும்? அடிப்படை விசயம் இது..
செருப்பிலும் இடுப்பு பெல்டிலும் உபயோகப்படுத்தும் பொழுது மட்டும் தெரியவில்லையா என்று சிலர்.. தற்போதெல்லாம் மாட்டுத்தோலை விட ரப்பரும் ரெக்ஸின் என்னும் மூலப்பொருளே அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.. அப்படி தோளினால் செய்யப்படுவதை தவிர்ப்பதும் நல்லதே.. இறைச்சியையே சாப்பிட வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. மாட்டிறைச்சியையாவது சாப்பிடுவதை தவிர்க்கலாம் என்று தான் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.. இதனை சொல்லாமல் இருந்திருந்தால் கூட பல மாடுகள் பிழைத்திருக்கும் போல. சில மூடர்கள் எதைக் கூறினாலும், எதிராகத்தான் செய்வோம் என்று, வீம்புக்காகவே மாட்டிறைச்சியினை சாப்பிட்டு, அதனை புகைப்படமாக வெளியிடுகிறார்கள்.. தற்கொலை செய்துக் கொள்வதும் தவறு என்கிறோம்.. அவர்கள் அதற்கு எதிர்மறையாக செய்யட்டும்.. முடிந்தவரை மாட்டிறைச்சியை புறக்கணியுங்கள்..
ஒருவேளை இந்தியாவில் நாய் மாமிசம் உண்ணப்பட்டு, மேலும் அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அதை தடுப்பார்களா அல்லது உரிமை என்பார்களா? மாடுகள் மனிதர்களின் உணவென்று யார் சொன்னது? அது உணவு என்றால் அதை உண்பதால் ஏன் நோய்கள் வருகின்றன? ஏன் அதை உண்பவர்கள் அசுரகுணம் உடையவர்களாக கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறார்கள். ஏனோ? பசுக்கள் அதிக உணர்வுகள் உடையவை. கோபம், துக்கம், பகைமை, பாசம், மகிழ்ச்சி என பல்லுணர்வுகள் உடையவை. ஒருவர் நம்மை கொல்ல வந்தால் நமக்கு என்னவெல்லாம் உணர்வு ஏற்படுமோ அத்தனையும் மாடுகளுக்கும் ஏற்படும். ஒரு மாட்டை தின்னும் போது அதன் இறைச்சியை மட்டும் நாம் தின்பதில்லை, மாறாக அதன் உணர்வுகளையும் சேர்த்தே உள்வாங்குகிறோம். கொல்லப்படும் பசு பகைமை உணர்வோடும் வெறுப்போடும் இருக்கும். அதன் ஹார்மோன்களை நாம் உள்வாங்குதல் நமக்குள்ளும் வெறுப்பு, பகைமை, வெறி, ஆவேசம், பயம் போன்ற பல எதிர்மறையான குணங்கள் மனத்துள் குவிகின்றன. இதுவே மாட்டை தின்பவர்களை பயங்கரவாதிகளாக ஆக்குகின்றன.
மாடுகளின் மேன்மையைப் பாராட்டி விழா எடுக்கும் நாட்டில் அதை கொன்று தின்பது தர்மமா? தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்!
இந்துமதத்தை தூய வடிவில் தெரிந்து கொள்ள இந்த page யை like செய்யவும்.
(நிலை தடுமாறி சென்றுள்ள நமது சொந்தங்களை தாய்மதத்திற்கு திரும்ப அழைப்பது ஒவ்வொரு இந்துவின் கட்டாயக் கடமை )

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

தெரிந்துகொள்வோம் :

அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள்.??
>> மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது.
>> இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது.
>> தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது.
>> இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில்,மலைகோட்டை என மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம்.

மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற ஏழு!!!! ..
மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..
1. வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்;
2. நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு;
3. தாகவிடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்;
4. கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத பெண்டிர்;
5. கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;
6. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்;
7. நீராட வருபவனின் பாவம் தீர குளிக்க இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவை ஏழும் இருந்தும் பயனற்றவை.


வியாழன், 18 செப்டம்பர், 2014

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்


....................................................................
உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு!பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.
இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிஹாஸ புராணங்களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும் ஹிந்து இதிஹாஸ புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.
இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.
இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!
விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற, அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை உருவாகி உள்ளன.
கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.
எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.
பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.
இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். "தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!
அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது."
அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில் சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:
"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."
நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.
விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)
இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)
செர்ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.
ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?

https://www.youtube.com/watch?v=o8ENNgO4z5c

ஞாயிறு, 11 மே, 2014

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்:-



1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.
2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.
Photo: வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்:-

1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.
2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.
3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.
7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.
8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.
10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.
11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது...3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.
7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.
8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.
10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.
11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது...

சனி, 26 ஏப்ரல், 2014

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை



காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். 

எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. 
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், 

முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய், 

எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.

எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.

எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

திங்கள், 21 ஏப்ரல், 2014

வாழை இலையின் பயன்கள்

வாழை இலையின் பயன்கள்

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி
காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும்
விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை
சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு
தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு
மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது
சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம்
இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு
இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில்
தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால்
ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும்
போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற
முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது
ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள்
வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி
வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு)
சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து
அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்

மெட்டி அணிவது ஏன்?

மெட்டி அணிவது ஏன்? 

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.. ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

மூக்குத்தி அணிதல்




மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. சிறு குழந்தைகளுக்கு மூக்குத்தி குத்தும் பழக்கம் இல்லை. பருவப்பெண்களே மூக்குத்தி அணிய வேண்டும்.பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது.

இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.

காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.

நமது மூளையின் அடிபகுதியில் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சில பகுதிகள் உணர்ச்சி களை செயல்படுத்தும். இந்த பகுதியின் செயல் பாட்டை பெண்களுக்கு அதிகப்படுத்த மூக்குத்தி அவசியப்படுகிறது.பெண்களின் இடதுபுற மூக்கில் குத்தக்கூடிய மூக்குத்தி, வலது புற மூளையையும் வலது புற மூக்கில் குத்தும் மூக்குத்தி இடதுபுற மூளையையும் இயக்க கூடியதாக உள்ளது.

இன்று இருபுறமும் மூக்குத்தி அணிந்தாலும் சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் தான் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனா சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.

நமது முன் நெற்றிப்பகுதியில் இருந்து சில நரம்புகள் மூக்கு தூவாரம் வரை கீழ் இறங்கி மூக்கு பகுதியில் மெல்லிய துவாரங்களாக இருக்கும். இதில் அணியப்படும் தங்க மூக்குத்தி உடல் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சி அளிக்கும்.

மூக்கு மடலில் ஏற்படுத்தப்படும் துவாரம் நரம்பு மணடலத்தில் உள்ள அசுத்த வாயுவை அகற்றும். ஒற்றைத்தலைவலி, நரம்பு நோய்கள், உளச்சோர்வு ஏற்படமால் மூக்குத்தி தடுக்கிறது

ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்?


இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.

மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும்.
மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.
இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.

எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.

மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன

புதுமணத்தம்பதிகள் ஆடி மாதம் சேர கூடாது ஏன்?



ஆடிமாதம் வந்தாலே புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புதுமணத் தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மாவீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். ஒரு மாதத்திற்கு தனிபடுக்கைதான். காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூகரீதியாக மட்டுமின்றி அறிவியல்ரீதியாகவும் நன்மை தரக்கூடியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அம்மன் மாதம்

தமிழில் ஆடி என்று மலையாளத்தில் கார்கிடகா என்றும் அழைக்கப்படும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் பெரும்பாலான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்த சமயத்தில் வீட்டில் உள்ள இளசுகள் இணைந்திருப்பது அந்தளவிற்கு உகந்ததல்ல என்பது பழங்கால நம்பிக்கையாகும். இறைவனை பிரார்த்திக்க மட்டுமே உகந்த மாதத்தில் தாம்பத்ய உறவு ஏற்றதல்ல என்கின்றனர் முன்னோர்கள். அதனால் பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகின்றனர்.

ஆடிமாதம் பிறப்பதற்கு முதல்நாள் புதுமணத்தம்பதியர்களுக்கு சீர் கொடுத்த பெண்ணின் பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து புத்தாடையும், நகையும் கொடுத்து அணியச் சொல்கின்றனர். விருந்து உபசாரம் முடிந்த பின்னர் பெண்ணை விட்டுவிட்டு மாப்பிள்ளை தன்னுடைய வீட்டிற்கு சென்று விடுகிறார்.

ஆயுர்வேதம் சொல்லும் உண்மை

ஆடிமாதம் பலம் குன்றியமாதமாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த மாதத்தில்தான் பருவமழை தொடங்கும். தண்ணீரின் மூலமும் காற்றின் மூலமும் ஏகப்பட்ட நோய்கள் பரவும். இந்த சமயத்தில் புதுமணத்தம்பதிகள் இணைய நேரிட்டால் கருவில் உதிக்கும் குழந்தைக்கு எளிதில் நோய் தாக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. எனவேதான் இந்த மாதத்தில் இணைவதற்கு தடை விதித்து இறைவழிபாட்டிற்குரிய மாதமாக கொண்டாடி வருகின்றனர்.

சூரியனின் நகர்வு

ஆடி மாதம் தட்சனயண தொடக்கக் காலமாகும். வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி சூரியனின் பயணம் தொடங்கும். இந்தகால கட்டதில் சூரியனை வணங்கி தியானத்தில் ஈடுபடவேண்டும் என்றும் கூறுகின்றனர். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். மேலும் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்களை இந்த மாதத்தில் வாசிப்பது நல்லது என்கின்றனர் முன்னோர்கள்.

ஆடிமாதம் விவசாயத்திற்கு ஏற்ற மாதம். குளம், குட்டைகள் நிரம்பி வழியுமாம். அப்பொழுது விவசாயத்தை தவிர வேறு எதிலும் கவனம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காகவும் இந்த பிரித்து வைக்கும் சடங்கினை ஏற்படுத்தியிருக்கலாம் என்கின்றனர்.

சித்திரையில் குழந்தை

ஆடியில் கூடினால் சித்திரையில் குழந்தை பிறக்கும் என்பார்கள். சித்திரைமாதம் அதிக வெப்பமான மாதம். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எளிதில் சின்னம்மை போன்ற வெப்பநோய்கள் தாக்கும். அடிக்கடி நோய்வாய்படும் என்பதால்தான் ‘சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியும்’ என்ற சொல்வழக்கு உள்ளது. இதை காரணமாகக்கொண்டுதான் ஆடிமாதம் தம்பதியர் உறவில் ஈடுபடுவது நல்லதல்ல என்கின்றனர்.

செக்ஸ் என்பது மனிதவாழ்வின் ஒரு அங்கம். இது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைவரும் பாடுபடுகின்றனர். எனவே ஆடி மாத உறவு என்பது பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காகவே தம்பதியரை பிரித்து வைக்கின்றனர் என்று நிரூபித்துள்ளனர்.

புதன், 9 ஏப்ரல், 2014

மின்சாரம்



மின்சாரம் கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டில் தேல்ஸ் என்ற தத்துவவியலாளரின் குறிப்பின் மூலம் நாம் இதை அறியலாம். தேல்ஸ் அவர் மாணவர்களுக்கு இச்சோதனையை நடத்திக்காட்டுவாராம். அவர் அம்பரைக் கம்பளியால் நன்கு தேய்ப்பார், அப்பொருது அம்பரிருந்து 'கிரிக் கிரிக்' என்ற சத்தம் எழும், பின்பு அவர் அம்பரை குவிக்கப்பட்டுள்ள சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வைக்கோல் அல்லது மர இழைகள் மீது ஒரு செமீ மேல் பிடிப்பார், அப்போது வைக்கோல் அல்லது மர இழைகள் அம்பரை நோக்கித் துள்ளும். இருட்டான அறையில் இச்சோதனையை நடத்தினால், சில நேரங்களில் அம்பரில் இருந்து தீப்பொறிகள் எழும். இலத்தீனில் அம்பரை எலக்டிரான் என்ழழைப்பர். இச்சொல்லே திரிந்து மின்சாரத்தை ஆங்கிலத்தில் "எலட்டிரிசிட்டி" என அழைக்கின்றனர். தேல்ஸ் கண்டுபிடித்த மின்சக்தியை நாம் இப்பொழுது நிலை மின்சக்தி என அழைக்கிறோம்.

கோயில்களில் தீபாராதனை காட்டுவது ஏன்...???



கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் செய்யப்படுகின்றன. கற்பூரம் கடைசிவரை எரிந்து போகும். எதுவுமே மிஞ்சாது. 

மனிதன் இறந்தபிறகும் இதே நிலைமைதான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டுகிறார்கள். 

எனவே நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம் என்பதை எடுத்துக் காட்டவே தீபாராதனை செய்யப்படுகிறது.

மேலும் கற்பூர தீபாராதனைக்குப் பிறகு பிரசாதமாக கொடுக்க அதில் எதுவுமே மிஞ்சாது. இதரவகை வழிபாடுகள் மூலம் நைவேத்தியம் மிஞ்சும்.

அதை பிரசாதமாக கொடுப்பதற்கு வழி உண்டு.

கற்பூரம் தன்னைத்தானே அழித்துக்கொண்டு ஒளி கொடுப்பதைப்போல நாமும் மற்றவர்களுக்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த தீபாராதனை செய்யப்படுகிறது.

இந்து மதம் மட்டுமே...!!!

நம் ஒவ்வொருவருக்கும் நாகரீகத்தை,,,

பயம் , மரியாதை , கடமையாக உணர்த்தியது,,, 

இந்து மதம் மட்டுமே...!!!

வீட்டு விசேசங்களுக்கு,,, 
குருத்தோலை , வாழைமரம் கட்டுவது ஏன்,,,???

எல்லோருக்கும் தெரிந்தது போல் , பச்சை தாவரங்கள் பகல் பொழுதுகளில் கரியமிலைவாயு (CO2) வை உள்ளெடுத்து பிராணவாயு (O2) வை வெளிவிடுகிறது தங்களது உணவுத்தொகுப்பின் போது. 

திருவிழா, திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகள், மரணச்சடங்கு போன்ற அமங்கள நிகழ்வுகள் எல்லாம் அதிகளவு மக்கள் தொகையால் கரியமிலை வாயுவின் அடர்த்தி அதிகமானதாகவேயிருக்கும்.

ஆதலால் அதை குறைக்கவும் ஆக்சிஜனின் அளவை கூட்டவும் , சம்பிரதாயம் என்ற பெயரிலேயே,,,

விஞ்ஞானத்தை உட்புகுத்தியவர்கள் எங்கள் முன்னோர்கள்.

அதிலும் குருத்தோலைதான் மிகச்சிறப்பாக ஒளித்தொகுப்பில் ஈடுபடும் என்பது இங்கே குறிப்பிட்தக்கது.

(மிக அகலமான இலையுள்ள வாழைமரம் கட்டுவதும்தான்)

வடக்கில்

இந்த பூமியானது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தனித்தனி கண்டமாக இல்லாமல் ஒரே நிலப் (Pangaea) பகுதியாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக (Continental Drift) விலகி இப்போதைய நிலக்கு வந்துள்ளன. இன்னும் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் பார்த்தால் ஆப்பிரிக்கா ,அமெரிக்கா ஆகிய கண்டங்கள் இப்போதைய நிலையில் இருக்காது. ஆனால் உலகப் படத்தைப் பார்த்தீர்களானால் ஒரு வியப்பான விஷயத்தைக் கவனிக்கலாம். ஒரே நிலப் பரப்பு விலகி விலகி சென்றபோது ஏன் வடக்கே மட்டும் அதிக நிலப்பரப்பு (land mass) போயின? தெற்கே ஏன் அதிகம் கடற்பரப்பு (oceans) வந்தன? ஏன் எல்லா கண்டங்களும் கீழே குறுகியும் மேலே பருத்தும் இருக்கின்றன. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா ஆகிய நிலப் பரப்பைப் பாருங்கள். வடக்கில் பெரிய நிலப் பரப்பும் தெற்கில் சுருங்கி தீபகற்பமாகவும் (peninsular) இருக்கும். ஏன் இப்படி வந்தது என்றால் இதுவரை யாரும் விடை சொல்ல முடியவில்லை.

பூமியில் வடக்கில் காந்த சக்தி அதிகம் இருந்ததால் கண்டங்களை இப்படி மேல் நோக்கி இழுத்தனவா? அல்லது தன்னிச்சையாக வடக்கில் நிலப் பரப்பு கூடியதாலங்கே காந்த சக்தி அதிகரித்ததா? இதற்கு விடை கிடைத்தாலும் விடை கிடைக்காவிட்டாலும் வடக்கில் நிலப் பரப்பு குவிந்திருப்பதை யாரும் காணலாம்.

ஆக பூமி என்னும் காந்த உருண்டைக்கு மதிப்பு கொடுத்து அதனுடன் மோதாமல் இருக்க வேண்டுமானால் வடக்கைத் தவிர வேறு திசையில் தலை வைத்தும் உறங்கலாம். கிழக்கு திசையிலோ தெற்கு திசையிலோ தலைவைத்துப் படுப்பது உத்தமம்.
புனித திசை வடக்கு
இந்துக்களுக்கு வட திசை மீது மதிப்பும் மரியாதையும் அதிகம். கையிலாயமும் மேருவும் இருக்கும் புனித திசை அது. உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க விரும்புவோர் வட திசை நோக்கி அமர்ந்து உயிர் விடுவர். சங்க இலக்கிய நூல்கள் கோவூர்க் கிழாரும் கோப்பெருஞ் சோழனும் உண்ணாநோன்பு இருந்ததை வடக்கிருத்தல் என்றே அழைப்பர். மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் வட திசைப் பயணம் நோக்கிப் பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர்விட்டதையும் படித்திருப்பீர்கள். இதை மஹா பிரஸ்தானம் என்று அழைப்பர்.

தமிழரின் பெருமை – அறிவியல் கண்டுபிடிப்பு

பெரும்பாலான உலக மக்கள் தாலமியின் தவறான அறிவியல் கண்டுபிடிப்பை(???) நம்பி கொண்டிருந்த பொழுது அதே தொலமியின் காலகட்டத்திற்கு முன்பே தமிழரின் சரியான, புரட்சியான விஞ்ஞான கண்டுபிடிப்பை ஒருவரும் அறியவில்லையே?
தொலமி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு {கி.மு 1(க)-ம் நூற்றாண்டில்} வாழ்ந்த எகிப்து வானவியலாளர் ஆவார். இவர் பூமியை சுற்றியே சூரியன், கோள்கள், ஏன் விண்மீன்கள் கூட சுற்றிவருகின்றன தன் கண்டுபிடிப்பாக அறிவித்தார். இந்த அறிவியல்!!! கண்டுபிடிப்பானது கோபர் நிக்கஸ், கலீலியோ வரும் வரை அதாவது கிட்டதட்ட கி.பி 1500 வருடங்கள் கோலோச்சியது
ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் சூரியனையே ஏனைய கோள்கள் சுற்றி வருகின்றன என்று தெளிவாக எழுதியுள்ளார்.

நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல,
மலர் தலை மன்றத்தும் பலருடன் குழீகிக்,
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்,
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ,
திருஞ்செருவின் இகன்மொய்ம்பினோர்.

சூரியனை சுற்றி வரும் கோள்களை போன்றே இந்த வீரனை அனைவரும் சூழ்ந்து கொண்டு தாக்குகின்றனர். ஆனால் இந்த வீரன் ஒருவனே அனைவரையும் சமாளிக்கின்றான் இப்பாடலில் மாவீரமும், “மாவிஞ்ஞானமும்” வெளிப்படவில்லையா….???!!!!!!