ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஜனவரி, 2016

தீபாவளியும் சைவத்தமிழருக்கு உரிய சைவப்பண்டிகையே!!!




இன்று பலர் தீபாவளியை ஆரியர் பண்டிகை என்றும் தமிழர் கொண்டாடக்கூடாதென்றும் அசூரரான தமிழரை கண்ணன் கொன்றநாள் என்றும் கூறுகின்றனர். தமிழன் செத்தநாளை தமிழர் கொண்டாடலாமா என்று கேள்விக்கணைகள் தொடுக்கின்றனர்!!!! என்னே அறிவீனம்!!!!!!!! இது மிசனரிகளின் சதி!!! நெற்றிமுழுக்கப் வெண்பூச்சு,சிவப்பு பூச்சுக்கள் அணிவது தமிழர் பண்பாடு. அதை இந்தியாவிலுள்ள அனைந்து வைதீகமதத்தினரும் பின்பற்றுகின்றனர்! அவர்கள் யாரும் இது தமிழர் பண்பாடென்று இதனை ஒதுக்குவதில்லை.
சிவவழிபாடு சிந்துவெளித் தமிழரின் வழிபாடு. அதனையாரும் சிந்துவெளி தமிழரின் வழிபாடென்று ஆரியர் கூறுவதில்லை.



மாயோன் மேய காடுறை உலகமும் - தொல்காப்பியம் திருமால் வழிபாடு தென்னாட்டில் முல்லைநிலத் தமிழரின் நிலவிய வழிபாடு. அதனையும் ஆரியர் தமிழருடையதென்றுகூறி கைவிட்டிலர். கண்ணன் சங்ககாலத் தமிழ்நூல்களில் போற்றப்படுகின்ற ஓர் தெய்வம். திருமாலின் அவதாரமாக சொல்லப்படும் தெய்வம். கரியநிறத்தவன் என்று வைதீகசமய நூல்கள் அனைத்தும் சொல்கின்றன. எனவே அவன் தமிழ்த் தெய்வம் என்பதில் என்ன ஐயம்??? எனவே தமிழ்த் தெய்வமான கரியநிறக் கண்ணன் அசூரனை அழிப்பதில் என்ன தலையிடி உருவாயிற்று இந்த மேதாவித்திராவிடர்களுக்கு???? சரி! அசூரன் என்றால் தமிழன் என்ற இவர்களின் அடுத்தவாதத்துக்கு வருவோம்!!! காகாசூரன் - இந்திரனின் மகன் இராமரின் பிரம்மாஸ்திரத்துக்கு தனது கண்ணைப் பறிகொடுத்தவன்.இந்திரனின் மகனுக்கும்(தேவருக்கும்) அசூரன் என்று பெயர் உள்ளதே? தேவர் ஆரியர் என்னும் வாதம் நியாயமெனின், அவர்களுக்கு அசூரர் என்று பெயர் எங்கனம் பொறுந்தும்? அசூரர் என்றால் தீயசிந்தனை உடையவர் என்றும் தேவர் என்றால் நற்சிந்தனை உடையவர் என்றும் பொருள். அவ்வளவே!!!! சிவபெருமானை மதியாது, தட்சனின் யாகத்தில் பங்குபற்றிய தேவர்கள் வாங்கிய அடியும் உதையும் சிந்துவெளித் தமிழரின் சிவனுக்குக் கீழ்த்தான் தேவர்கள் என்பதை வைதீகம் ஏற்றதன் விளைவு என்பதை இந்ததிராவிடமேதாவிகள் உணர்வார்களா? சைவசமயப்படி, தேவர்கள் என்போர் புண்ணியபலத்தால் தேவபதவிகளைப் பெறுபவர்கள். ஆனால் அவர்களுக்கும் மலபந்தம் உண்டு. இரகுமன்னன் (இராமனின் முன்னோர்) இந்திரனை வென்றதை இந்த மிசனரிகளின் ஆட்டுவிப்பால் ஆடுகின்ற திராவிடமேதாவிகள் எந்த ஆரிய திராவிடக் கதைக்குள் உட்படுத்துவார்களோ சிவசிவ!!! ஆரியவீட்டுச் சகோதரச் சண்டை என்பார்களோ???? மனிதர்கள் தேவரை வணங்குவதாகவும் தேவர்களுக்குப் பயந்தவர்களாகவுமே வேதமந்திரங்கள் உள்ளன. இங்கு வேதம் ஆரியர் நூலாயின், அதில் ஆரியர் தம்மை மனிதராகவே குறிப்பிடுகின்றனர். அவர்கள் தேவர்களுக்குப் பயந்தவர்களாகவே, தேவர்களை வழிபடுபவர்களாகவே கருதப்படுகின்றனர். மனிதர்களே, வேள்விகளில் இந்திரனையும் அக்கினியையும் போற்றுங்கள். -ரிக்வேதம் மண்டலம் 1 - 21 - 2 (உருத்திரன்)அவன் எங்களுடைய குதிரைகளுக்கும்,செம்மறிகளுக்கும்,செம்மெறிக் கடாக்களுக்கும்,மனிதர்களுக்கும், பெண்களுக்கும்,பசுக்களுக்கும் இனிமையாய்த் தோன்றும் சுகத்தைத் தருவானாக. -ரிக் வேதம் மண்டலம் 1 - 43 - 6 தேவர்களான மித்திரனும் வர்ணனும் அர்யமானும் ஆதியான தூதுவனான உன்னை(அக்கினியை)எழுப்புகின்றார்கள். - ரிக்வேதம் மண்டலம் 1 - 36 - 4 ஈவிரக்கமற்று கொலைத்தொழிலைச் செய்யும்போது தேவரையும் அசூரன் என்றநிலையில் இருப்பதாகவே வேதம் உரைக்கின்றது. அசுரனான வருணனே! உன்னுடைய வேள்வியில் தீமை செய்பனை எந்தப் பயங்கர ஆயுதங்களால் நீ அழிக்கின்றாயோ அவற்றால் நீ எங்களைத் துன்புறுத்தாதே. நாங்கள் ஒளியிலிருந்து புறத்தே செல்லாதிருப்போமாக. நாங்கள் வாழ துஷ்டர்களை விலக்கவும். - ரிக் வேதம்.மண்டலம் 2 - 28 - 7 எனவே, தேவர் என்பவர் வேறு. மனிதர்(ஆரியர்) என்பவர் வேறு. இது தெளிவாகின்றது.அத்துடன் அசூரர் என்பவர் தீமைசெய்பவர் என்ற பொருளிலேயே வேதத்தில் உள்ளது. இங்கு அசூரர் என்றால் திராவிடர் என்பது திராவிடமேதாவிகளின் மிசனரிக் கண்டுபிடிப்பு!!!!! சரி, நரகாசூரனுக்கே வருவோம்!!! அவன் தமிழன் என்பதற்கு இவர்கள் வைக்கும் ஒரேவாதம் "அசூரன்" என்பதுதான்!!! அதுதவிர வேறெந்த வரலாற்று,இலக்கிய ஆதாரமும் இல்லை. ஏற்கனவே யாம் இங்கு விளக்கியதுபோல், கரியநிறத் தமிழ்த் தெய்வமான கண்ணனின் துணையோடு, சத்தியபாமா நரகாசூரனை வதைக்கின்றாள். இங்கு சத்தியபாமா பூமாதேவியின் அவதாரம். நரகாசூரனோ பூமாதேவியின் மகன். பூமாதேவி திருமாலின் மனைவி. எனவே, இந்த திராவிடமேதாவிகளின் கதைப்படி பார்த்தால், ஆரியர் ஆரியரின் மகனை அல்லவா அழித்துள்ளனர்!!!! அதற்கு தமிழர் ஏன் கவலைப்படவேண்டும்!!!! ஆரியத் தாயும்(?? ஆரியந் தந்தையும் (?) சேர்ந்து உலகுக்கு அட்டூழியங்களைச் செய்த தமது மகனை அழித்துள்ளனர். இது பாராட்டப்பட வேண்டிய விடயம்தானே!!!!! முல்லைநிலக் கடவுள்,கரியநிறம் என்பவற்றை வைத்துப்பார்த்தால், தமிழ் கண்ணனும் அவரது மனைவியும் இணைந்து உலகுக்குக் கொடுமைசெய்த பிரகஜோதிஷம் என்னும் வங்கதேசத்தை ஆண்ட தமது மகனை அழித்துள்ளனர். உலக நன்மைக்காக, தமது மகனையே வதைத்த வீரத்தமிழர்களை பாராட்டவேண்டியது தமிழர் கடமைதானே!!!! இதில் திராவிடமேதாவிகளுக்கு என்ன தலையிடி வந்தது!!!!!! பிரம்மதேவனிடமே நரகாசூரன் தன்னைத் தன் தாயைத்தவிர வேறுயாரும் கொல்லக்கூடாதென்ற வரத்தைப் பெற்றான். இந்தத் திராவிடமேதாவிகளின் திராவிட நரகாசூரனுக்கு ஆரியப் பிரம்மதேவன் வரங்கொடுத்தான் என்றால், ஆரியர்கள் கொடையின் வடிவம் என்றல்லவா பொருள்கொள்ள வேண்டும்!!!!!! தீபாவளியைப் போல், இராமனையும் ஆரியன் என்று திராவிடமேதாவிகள் உரைப்பர். இராவணனைக் கொன்ற இராமனும் கரியனாகவே இராமாயணம் கூறுகின்றது. எனவே திராவிடமேதாவிகளின் நிற தத்துவப்படி இராமனும் தமிழனே!!!!! இராமாயண காலம், ஆரியர் குடியேற்றக்காலத்திற்கு முற்பட்டது. எனவே இராமாயணத்தில் கரிய இராமன் இராவணனை வதைத்ததில் என்னதான் இந்தத் திராவிடமேதாவிகளுக்கு இடைஞ்சலோ??? எனவே, இதிலிருந்து நாம் திராவிடமேதாவிகளின் ஆரிய-திராவிட மோட்டுவாதங்களின் வெறுமையை உணரலாம். சரி, இது சைவர்களுக்குரியதா? கண்ணன் வைணவக் கடவுளாயிற்றே!!! சைவர்கள் கொண்டாடின் சைவக்கற்பு என்னாவது? இப்படியும் சிந்திப்போர் உண்டு. இராமன்,கண்ணன்,திருமால் என்னும் தெய்வங்கள் அனைத்தும் சைவக்கடவுளர்களே. அதில் சைவர்கள் குழம்பாது இருக்கவேண்டியது சைவர்களின் கடமை. கண்ணன்,இராமன்,திருமால் மூவரும் வீபூதிதாரணர் என்றே வேதங்களும் உபநிடதங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. திரிசூலம் என்னும் வலைத்தளத்தில் கண்ணன்,இராமன், திருமால் மூவரும் வீபூதிதாரணர் என்பதை விளக்கி மூலநூல்களின் ஆதாரத்துடன் கட்டுரை உள்ளது. படித்துப் பயன்பெறுக. அதிலிருந்து சில உதாரணங்களை நான் இங்கு தருகின்றேன். இராமர் வீபூதிதாரண சிவபக்தர் //////“க்ருதாபிஷகஸ் ஸரராஜராமஸ் ஸீதாத்விதீயஸ் ஸஹலக்ஷ்மணேந க்ருதாபிஷேகஸ்த் வகராஜ புத்ர்யா ருத்ரஸ்ஸ விஷ்ணுர் பகவாநி வேச : ” என்று கூறுகிறது வால்மிகி ராமாயணம். இச்சுலோகத்தின் பொருள் : “பகவானும் ஈசருமான உருத்திரர் பார்வதியாரோடு ஸ்நாநம் பண்ணி விஷ்ணு தேவருடன் விளங்கினதுபோல, இராமர் சீதையோடு கோதாவரியில் மூழ்கி இலக்குமணருடன் விளங்கினார் ” “ராமம்…பஸ்மோத் தூளித சர்வாங்கம் ” -ராம ரஹஸ்ய உபநிஷத் இதன் பொருள்,”இராமர் சர்வ அங்கங்களிலும் விபூதி தாரணமுடையார் ” என்பதாகும்.மேலும், அதர்வண வேதத்திலுள்ள பஸ்மஜாபால உபநிஷத், “பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷா பரணா :தக்ஷிணாயாந் திகி விஷ்ணு ” என்று கூறுகிறது. “திருமால் ஸ்ரீ காசி ஷேத்திரத்திலே தென்திசைக்கணிருந்து ,விபூதி ருத்திராக்ஷதாரணமுடியவராய் உபாசிக்கின்றனர்” என்பது பொருள்./////// -நன்றி -திரிசூலம்



கண்ணன், திருமால் வீபூதிதாரண சிவபக்தர்கள் ///////மகாபாரதம் ஆதி பர்வம்,அத்தியாயம் 241 : “கிருஷ்ணன்…மகாதேவ பூஜைக்காக முப்பத்து நான்கு தினம் இரவும் பகலும் மஹோத்சவம் நடப்பதென்று சொல்லி ...." வனப் பர்வம்: i) அத்தியாயம் 20 : “க்ருஷ்ணர் ‘நான் சிவபெருமானை தலையால் வணங்கினேன்’ என்றார் ” ii) அத்தியாயம் 82 : ‘விஷ்ணு ருத்ரரை ஆதாரித்தார்’ துரோணப் பர்வம் : i)அத்தியாயம் 81 : ‘ க்ருஷ்ணரும் பார்த்தனும் … ஆசமனஞ் செய்து கைகளை குவித்துக் கொண்டு…. ருத்ரரை நமஸ்கரித்து ‘ ii)அத்தியாயம் 202 :‘நாராயணர் ருத்ரரைக் கண்டு நமஸ்கரித்தார்’ ‘ருத்ரரை புண்டரிகக்ஷர் பக்தியுடன் நமஸ்கரித்து ஸ்தோத்திரம் செய்யலானார்’ கர்ணப் பர்வம் : i)அத்தியாயம் 21 : ‘அர்ஜுனனும் கேசவரும் பகலில் செய்யவேண்டிய வைதிக கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு,முறைப்படி பிரபுவான ருத்ரரைப் பூஜித்து’ ii)சாந்திப் பர்வம் ,அத்தியாயம் 110 : ‘இந்திரனும் விஷ்ணுவும் ருத்திரரும் ….பிரம்ம தேவரும்,தேவர்களின் தேவரான எந்த மகேஸ்வரரை ….துதிக்கிறார்களோ ‘///////// -நன்றி -திரிசூலம் கண்ணன் உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்றதாக மகாபாரதம் கூறுகின்றது. மேலும் சிவகீதை(பத்மபுராணத்தில் உள்ளது)யில் இராமர் அகத்தியரிடம் சிவதீட்சை பெற்று, திருநீறை உடல்முழுதும் பூசி, இராவணனை வெல்வதன்பொருட்டு பசுபதாஸ்திரம் பெறுவதற்காக, பாசுபதவிரதம் இருந்தார் என்கின்றது. திருமால் தனக்கு சக்ராயுதம் வேண்டி, சிவபெருமானுக்கு தனது கண்ணையே தாமரையாக அர்ப்பணம் செய்த சிவபக்தர் என்று சைவசமயம் கூறுகின்றது. மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் - திருப்பல்லாண்டு



இராமனுஜரின் வைணவதாபனத்திற்குப் பிற்பாடே, தனிமதமாக வைணவம் வளரும்போது வீபூதிக்குப்பதிலாக நாமம்போடும் முறையை வைணவம் ஏற்படுத்தியது. அது வைணவர்களின் சமயவிருப்பு. ஆனால் மூலநூல்களின்படி அவர்கள் சைவதெய்வங்கள்.சிவபக்தர்கள். /////உடையவர் சூர்ண விளக்கம் எனும் வைணவ சுவடி கூறுகிறது, “ஸ்ரீ பெரும்பூதூரில் இவ்வருஷத்திற்கு 870 வருஷமான கலி நாலாயிரத்து நூற்றெட்டுக்கு பிங்கள வருஷம்…திருவவதரித்தருளிய ஸ்ரீ பாஷ்யக்காரர் காலத்திற்கு முன்பு இப்போதுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் பஸ்மாதிதாரணராய் இருந்தார்கள்…அப்படியிருந்த இவ்வைஷ்ணவர்களுக்கு ச்வேத பீத வர்ண புண்டரங்களையும் -நூதனமாக வெளியிட்டு அவைகளை திக்விஜயஞ் செய்வித்து தாபித்தார் கிடாய்..அதற்கு முன் இவர்களுக்கு திருமண்ணேது சிவந்த ஸ்ரீ சூர்ண மேது காண் ” .மேலும்,வடகலைக் குருபரம்பரை கூறுகிறது ,”சகவர்ஷம் ஆயிரத்திருபத்தொன்றான பகுதான்ய வர்ஷம் பங்குனி மாதத்தில் -திரு நாராயணப் பெருமாளைக் கண்டு திருமஞ்சனஞ் செய்வித்துக் கல்யாண ஸரஸின் வட மேற்கில் திருமண்ணையும் கண்டெடுத்துக் கோயில் நகர் முதலியவைகளைத் திருத்தி ” .ஆக,ராமானுஜர் தாண்,சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்,திருமண்ணை அறிமுகப்படுத்தியவர் என்று நமக்கு புலனாகிறது..ஆக,ராமானுஜருக்கு முன் வாழ்ந்த ராமர்,கிருஷ்ணர் எல்லோரும் திருமண்ணையா அணிந்திருப்பார்கள் ??///// -நன்றி -திரிசூலம் ஒருவனே மூவர் என்றும் ஒன்பது தினமும் அன்பால் பரமனை அருச்சித்தாரும் பாம்பு அணைப் பள்ளி வள்ளல் புரம் அது பொருந்தி வாழ்வர் போக பேதங்கள் பொங்க அரியன் யாவும் இல்லை அவர் தமக்கு அமலனால் ஏ. - சிவதருமோத்திரம் (சைவ உபாகம நூல்) சம்புபட்சமாய் உள்ள பிரம்மா,திருமாலையும் அரனோடு சேர்த்து மூவரையும் ஒருகடவுளாகக் கருதி , சிவபெருமானை ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாகப் பூசிப்பவர்கள் வைகுண்டப்பதவி பெறுவர் என்கிறது சைவ உபாகம நூல். அதாவது சம்புபட்சம்,அனுபட்சம் என்று இருவகை பிரம்மா, விட்ணுக்கள் உண்டு. அனுபட்சம் என்றால் ஆன்மாக்கள் பெறும் பதவிகள். சம்புபட்சம் என்றால் சிவபெருமானே எடுக்கும் வடிவங்கள். அவதார தெய்வங்கள் அனுபட்சமே. கண்ணன்,இராமர் என்பவர்கள் சைவத் தேவர்கள். பாம்பு அணைப் பள்ளியானை பழமொழி பகர்ந்த பாவி கோம்பி ஆய் உதர அங்கி கூர்ந்திடக் குலையும் அன்றே - சிவதருமோத்திரம் (சைவ உபாகம நூல்) பாம்பிலே பள்ளிகொள்ளும் நாராயணனை இழிவாகப் பேசியவன் ஓணானாய்ப் பிறந்து வயிற்றிலே தோன்றும் தீயால் உடல்குலைந்து நிற்பான் என்று சைவ உபாகமநூலான சிவதருமோத்திரம் உரைக்கின்றது. எனவே நாம் சைவத்திருமாலை சம்புபட்சமாகக்(சிவவடிவாக) கருதி வழிபடின் வைகுண்டவாசம் அதன்பலனாய்க் கிட்டும் என்பது தெளிவு. ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை ஒருபால் உமையவளாம் - காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி(பதினொராந் திருமுறை) தாழ்சடையும் நீள்முடியும், ஒண்மழுவும் சக்கரமும், சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால் - சூழும் திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுஉருவும் ஒன்றாய் இசைந்து -வைணவ நாலாயிர திவ்யபிரபந்த பாசுரம்(பேயாழ்வார் )



சைவநூற்களில் சொல்லப்படுகின்ற திருமாலுக்கு வலப்பாகம் அளித்த எம்பெருமானின் அருட்செயல் வைணவ நூற்களில் இல்லை. எனினும் வைணவ ஆழ்வாரான பேயாழ்வார் திருப்பதியில் சைவத்திலுள்ள இவ்வருட்செயலை உணர்ந்துகொண்டதன் வெளிப்பாடாக தமது பாசுரத்தில் சிவபெருமான் பாதியாகவும் திருமால் பாதியாகவும் தமக்கு வெங்கடேசப் பெருமாளின் காட்சி தோன்றியதாகப் பாடுகின்றார். எனவே வைணவப் பேயாழ்வார் உணர்ந்தவாறு, சைவநூற்களின்படி, சம்புபட்ச திருமால் சிவவடிவமே. அவ்வாறான சம்புபட்சமே சிவபெருமானின் நவதருபேதங்களில் ஒன்றாய் சைவம் கூறுகின்றது. கண்ணன்,இராமன்,அனுபட்ச திருமால் போன்றவர்கள் அனுபட்ச வடிவங்கள் (ஆன்மாக்கள் பெறும் பதவிகள்) சிவபக்தர்கள். சிவபெருமானால் அதட்டிக்கப்பட்டு, காத்தற்தொழிலையும் ஏனைய தொழில்களையும் செய்பவர்கள். வீபூதிதாரணர்களான அவர்களும் சைவர்களே. எனவே, இராமர்,கண்ணன்,அனுபட்ச திருமால் ஆகியோரை வீபூதிதாரண சிவபக்தர்களாகக் கருதி, சிவபக்தர்களுக்குரிய மரியாதையை வழங்கவேண்டியது நம்கடமை. மேலும், சைவத்தில் திருமால் உமையம்மையின் அண்ணன்.எனவே, சம்புபட்ச அனுபட்ச திருமால்களின் வேறுபாடுகளை உணராது இருவகைத் திருமால்களையும் ஒன்றாய்க்கருதி திருமாலை வைணவர்கள் முழுமுதற்கடவுளாய் கருதுகின்றார்கள் என்றமைக்காக, சைவர்கள் திருமால் சைவத்தெய்வமல்ல என்று முடிவெடுத்தல் கூடாது. அது அறியாமை!!!!



சைவர்கள் தமது வழிபாட்டறையில் இராமர்,கண்ணன்,திருமால் படங்கள் வைக்கும்போது படத்தின்மேல் படங்களைத் தாபிக்கும்போது செய்யும் வீட்டுப்பூசையில் வீபூதியையே பூசிவிடுதல் ஈழத்து சைவமரமாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. சைவர்கள் இராமர்,கன்ணன்,திருமாலை வீபூதிதாரணர்களாக படங்களை வரைந்துகொண்டால் இன்னும் சிறப்பாக அமையும்.



திருமுருக கிருபானந்தவாரியாரின்படி, தீபாவளியானது சிவசக்தி இணைந்த நாள். எனவே அவ்வண்ணமும் நாம் இத்திருநாளைக் கொண்டாடலாம். மேலும் இத்தீபாவளிக்கு பல்வேறு கதைகள் பிரதேசத்துக்கு ஒன்றென்ற அடிப்படையில் உண்டு. இதனை சீக்கியர்களும்,சமணர்களும்கூட தமது மதத்திற்கு ஏற்ப காரணங்களைக் கொண்டு கொண்டாடுகின்றனர்.எனவே இது சமணத்தில் இருந்து வைதீகசமயங்களுக்கு வந்ததா அன்றி வைதீகசமயங்களில் இருந்து சமணத்துக்கு வந்ததா என்று விதண்டாவாதங்கள் செய்யத் தேவையில்லை. எப்படி, முருகனின் வைகாசி விசாகமானது பௌத்தர்களுக்கு புத்தரின் பரிநிர்வாணம் அடைந்தநாளாக விளங்குகின்றதோ அதுபோல் ஒருநாளே பல்வேறு சமயத்தவர்களுக்கு சிறப்புநாளாக விளங்குவது பரதகண்டத்தில் தோன்றிய சமயங்களுக்கு பொதுவான இயல்பு. எனவே இதில் திராவிடமேதாவிகள் தேவையில்லாமல் வயிற்றெரிச்சல் படத்தேவையில்லை.
அதுசரி, தமிழ்க் கடவுள் முருகன் சூரபத்மர்களைக் கொண்டாரே......அதனைத் தமிழர் சூரன்வதை என்று தமிழக ஆலயங்களில் கொண்டாடுகின்றார்களே......அது முறையா? இப்படியொரு ஐயம் சிலமேதாவிகளுக்குத் திடிரென வந்துவிட வாய்ப்புண்டு!!! இம்மேதாவிகளே தெரியாத்தனமாக "தமிழ்க்"கடவுள் முருகன் என்பதை ஏற்பதால் விளக்கக்கட்டுரைகள் எழுதவேண்டிய சிரமங்கள் இல்லை என்றுணர்கின்றேன். சரி, நம்சைவத் தமிழர்கள் அனைவரும் இத்தீபாவளித் திருநாளை கரியநிற வீபூதிதாரண சைவத்தமிழ்க் கண்ணன் நரகாசூரனை வதைத்த நன்னாளாக, சக்தி சிவத்தில் இடப்பாதி பெற்ற திருநாளாக கொண்டாடுவோமாக.

பத்து அவதாரங்களில் பெருமாள் சிவபிரானை பூஜித்ததற்கு பல சான்றுகள் உள்ளன. அவற்றின் தொகுப்பே இது

.
01. மச்சாவதாரம்
சோமுகாசுரன் வேதங்களை திருடிச்சென்று, கடலுக்கடியில் ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில் கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் துன்பமடைந்தது. அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காண்கிறோம். திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் எனப்படுகிறார். கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம் முன்னாளில் சேலூர் (சேல் - மீன்) என்று அழைக்கப்பட்டது. அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
02. கூர்மாவதாரம்
திருப்பாற்கடலை தேவர்களும், அசுரர் களும் கடைந்தபோது, மத்தாக இருந்த மந்திரமலை கடலுக்கடியில் மூழ்காமல் இருக்க ஆமை (கூர்மம்) அவதாரம் எடுத்து தன் முதுகில் தாங்கினார் திருமால். ஆமை வடிவம் கொண்ட பெருமாள், மலையை தாங்கும் வல்லமையை தர சிவபெருமானை வேண்டினார். இதற்காக, காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சூர் சிவன் கோயிலில் ஆமைமடு என்ற தீர்த்தம் உண்டாக்கி பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. இங்குள்ள விநாயகர் சன்னதி விதானத்தில் திருமால் ஆமை வடிவில் சிவபூஜை செய்வது சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. முருங்கை மரத்தின்கீழ் ஜோதி வடிவாக விளங்கும் சிவலிங்கத்தை பெருமாள் ஆமை வடிவத்தில் வழிபட்டதால் இந்த சிவபெருமானுக்கு கச்சபேஸ்வரர் (கச்சபம் - ஆமை) என்ற பெயர் ஏற்பட்டது.
03.வராக அவதாரம்
இரண்யாட்சன் என்ற அசுரன் பாதாள லோகத்தில் இருந்தபடி தேவர்களைத் துன்புறுத்த பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமியை தோண்டி அங்கு சென்று அவனை அழித்தார். கோபம் நீங்காத அவரை சிவபெருமான் சாந்தப்படுத்தினார். சிவ தரிசனத்தால் சினம் தணிந்த பெருமாளுக்கு சிவபெருமான் அருள் புரிந்த தலமே திருப்பன்றிக்கோடு (வராகம் - பன்றி) ஆகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.
04.நரசிம்மஅவதாரம்
தன் பக்தனான பிரகலாதனை இரண்யனிடமிருந்து காப்பாற்ற நரசிம்ம அவதாரம் எடுத்து பெருமாள் வெளிப்பட்டார். இரண்யனைக் கொன்றார். அவரது உக்கிரத்தைத் தணிக்க, அதனினும் மேற்பட்ட உக்கிரத்துடன் சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவெடுத்தார். காஞ்சிபுரத்தில் தாமல் என்ற பகுதியில், நரசிம்மர் வழிபட்ட நரசிம்மேஸ்வர சிவாலயம் உள்ளது. புதுச்சேரி அருகிலுள்ள வில்லியனூர் தலத்தில் நரசிம்மர் வழிபட்ட காமீஸ்வரர் என பெயர் கொண்ட சிவபெருமானை தரிசிக்கலாம்.
05.வாமன அவதாரம்
மலை நாட்டை ஆண்ட மகாபலியின் ஆணவத்தை அடக்க அவனை குள்ள அந்தணன் (வாமனன்) வடிவெடுத்து திருமால் முக்தி கொடுத்தார். அவனை காலால் அழுத்தி பாதாள லோகம் அனுப்பிய பாவம் தீர பெருமாள் வழிபட்ட சிவத்தலம் கடலூர் அருகிலுள்ள திருமாணிக்குழியாகும்.
06.பரசுராம அவதாரம்
ஜமதக்னி என்ற முனிவரின் மகனாய் பிறந்து, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற தத்துவத்தை உணர்த்த, தன் தாயின் தலையையே கொய்து, அவளுக்கு மீண்டும் உயிர் வரம் கேட்ட அவதாரம் பரசுராம அவதாரம். இந்த அவதாரத்தில் மன்னர்களின் செருக்கையும் அடக்கினார் திருமால். திருமால் பரசுராமராய் பூஜித்த சிவத்தலங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் அருகிலுள்ள பழுவூர் மற்றும் மயிலாடுதுறை அருகே உள்ள திருநின்றியூர் ஆகும்.
07.ராமாவதாரம்
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை உணர்த்தவும், பெற்றவர் சொல் கேட்டு நடக்கவும், அநியாயத்தை எப்பாடுபட்டேனும் வேரறுக்கவும், சிவ பக்தனாயினும் காமத்திற்கு அடிமைப்பட்ட அரக்கனை அழிக்கவும் திருமால் எடுத்த அவதாரம் ராமாவதாரம். ராம நாமத்தை சிவனே உச்சரிக்கிறார் என்பதும் வரலாறு. அவரே அனுமானாக உருவெடுத்து, ராவணனை அழிக்க திருமாலுக்கு உதவினார் என்பதும் செவிவழிச் செய்தி. திருமால், ராமாவதார காலத்தில் சிவனுக்காக சேதுக்கரையில் ஒரு தலமே உருவாக காரணமாக இருந்தார். சிவலிங்கம் சமைத்து பூஜித்தார். அதுவே ராமேஸ்வரம் ராமநாதர் கோயிலாகும். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திலுள்ள சிவனை ராமர் வழிபட்டதாக கூறப்படுவதால் அவர் ராமலிங்கேஸ்வரர் எனப்படுகிறார்.
08. பலராம அவதாரம்
திருமால் கிருஷ்ணாவதாரம் எடுக்கும் முன்பு, அவரது சயனமான ஆதிசேஷன் பலராமனாக உருவெடுத்ததாகவும், திருமால் அதனைக் கவுரவிக்க தன் அண்ணனாக உருவெடுக்கச் செய்தார் என்பதும் பலராம அவதாரத்தின் வரலாறு. காஞ்சிபுரத்தில் பலராமர் வழிபட்ட சிவன் கோயில் பலபத்ர ராமேஸ்வரம் என பெயர் கொண்டதாகும். திருமறைக்காடு எனப்படும் வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்) அருகிலுள்ள கோடியக்கரை குழகர்கோயில் பலராமர் வழிபட்ட தலமாகும்.
09.கிருஷ்ண அவதாரம்
கண்ணன் தனது சிவயோக மகிமையால் சிவபெருமானாகவே இருந்து, குரு÷க்ஷத்ர யுத்தத்திற்கு காரண பூதராய் அழித்தல் தொழிலை செய்ததாக பாகவதம் கூறுகிறது. மேலும் கண்ணன் தன் வினைகள் தீர, திருவீழிமலை (திருவாரூர் மாவட்டம்) மற்றும் திருவிடை மருதூர் (தஞ்சாவூர் மாவட்டம்) சிவபெருமானை பூஜித்த தலங்களாக கூறப்படுகிறது.

சனி, 10 மே, 2014

முத்தமிழ் மொழியில் அருளிய இந்துவேதத்தின் சிறப்புகள்


********************************************
'ஆதிசிவனார் தெய்வீகச் செம்மொழியுமான தமிழ் மொழியில் அருளிய இந்துவேதம் தான் காலங்கள் தோறும் கடவுள்களாலேயே தேவைக்கேற்ப விளக்கங்களும் விரிவுரைகளும் வழங்கப் படுகின்ற ஒரே ஒரு வேதம்'.
நமது இந்துவேதம்தான் அருளுலகையும் பொருளுலகையும் நேரடியாக இணைத்துத் தருகின்ற ஒரே ஒரு வேதம்.
நமது இந்துவேதம்தான் இந்த மண்ணுலகில் தோன்றக் கூடிய அனைத்து வகைப்பட்ட இனத்தவருக்கும், மொழியாளருக்கும், நாட்டவருக்குமுரிய பொதுவேதம்.
நமது இந்துவேதம்தான், இம்மண்ணுலகில் பல்வேறு இனத்து மக்கள் இயற்கையாகத் தோன்றியது போலவே காற்று, கருப்பு, பேய், பிசாசு எனும் நான்கு வகைப்பட்ட கட்டுப்பாடற்ற, காட்டாற்றுப் போக்குடைய முரட்டுத்தனமான அருளுலகத்தவர்களும்; குடும்ப ஆண்டவர், குல தெய்வம், கிராமதேவர் தேவதை, நாட்டுக்கடவுள் எனும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மெல்லிய அருவியின் போக்குடைய, பண்பட்ட, நன்மை தரக் கூடிய அருளுலகத்தவர்களும் தோன்றினார்கள்;
எனவே, அருளுலகத்தவர்களுக்கும், பொருளுலகத்தவர்களுக்குமிடையே நட்பும், தோழமையும், சமத்துவமும்தான் உண்டே தவிர; யாரும் யாருக்கும் தலைவரோ, எசமானரோ, முதலாளியோ, அதிபதியோ இல்லை என்று மிகத் தெளிவாகக் கூறுகிறது.
நமது இந்துவேதம்தான், அருளுலகத்தவர்கள் பொருளுலகத்தவர்களுக்கு உதவி செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து; பொருளுலகத்தவர்கள், அருளுலகத்தவர்கள் வாழ்வதற்குரிய வாழிடங்களாக
- நூற்றுத் தொண்ணூற்றிரண்டு வகைப்பட்ட உண்–ழிகள், (இருக்கைகள், அமளிகைகள், திருவடிகள்)
- நாற்பத்தெட்டு வகைப்பட்ட கோயில்கள்,
- நாற்பத்தெட்டு வகைப்பட்ட கருவறைகள்,
- நாற்பத்தெட்டு வகைப்பட்ட வெட்டவெளிக் கருவறைகள்,
- நாற்பத்தெட்டு வகைப்பட்ட வழிபாட்டு நிலையக் கருவறைகள்,
- நாற்பத்தெட்டு வகைப்பட்ட கோயில் மூலக் கருவறைகள்
என்று வகைவகையான அருளுலகத்தவர் வாழிடங்களை அமைக்கக் கூடிய வேத ஆகம விதிமுறைகளை வழங்குகின்ற ஒரே வேதம்.
ஏனென்றால், இதுபோல் எந்த வேதத்திலும், எந்த மதத்திலும் எட்டு வகைப்பட்ட அருளுலகத்தவர்களும் வாழுவதற்குரிய வாழிடங்களின் வகைகளை நூற்றுக் கணக்கில் அறிவிக்கவில்லை, அறிவிக்கவில்லை, அறிவிக்கவில்லை, அறிவிக்கவேயில்லை; அறிவிக்க முடியாது, அறிவிக்க முடியாது, அறிவிக்க முடியாது, அறிவிக்கவே முடியாது என்பதுதான் உண்மை.
எனவேதான், இந்த உலகுக்கு நிலையான நன்மையைத் தரக்கூடிய உண்மையான வேதம் இந்துவேதம்தான் என்றும்;
கோடிக்கணக்கான கடவுளர்கள் பற்றிய உண்மைகளைக் கூறக்கூடிய ஒரே வேதம் இந்துவேதம்தான் என்றும்;
கடவுள்களை வரவழைப்பதற்கும், மனிதர்கள் கடவுள்களை மனிதர்களாக பிறப்பெடுப்பதற்கும், மனிதர்களை கடவுள்களாக மாற்றுவதற்கும் உரிய வழிவகைகளை எண்ணற்றுத் தருகிற ஒரே வேதம் இந்துவேதம்தான் என்றும்,
இந்த உலகில் தோன்றக்கூடிய அனைத்து வேதங்களுக்கும் மூலமாக, முதலாக, தாயாக, கருவாக, உயிராக, உள்ளீடாக இருப்பது இந்துவேதம்தான் என்றும்;
இந்த மண்ணுலகில் எத்தனை மதங்கள் தோன்றினாலும் சரி, அத்தனை மதங்களுக்குமுரிய மூலக்கோயில்களை உருவாக்கிக் கொடுத்துள்ள பெருமைக்குரிய வேதம் இந்துவேதம்தான் என்றும்,
கடவுள்களை நேரடியாகச் சந்தித்திட்ட, சந்தித்திருக்கின்ற, சந்தித்திடக்கூடிய அருளாளர்களை உடைய ஒரே வேதம் இந்துவேதம்தான் என்றும்,
அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்கள் கூறுகிறார்கள். அதாவது, இந்த மண்ணுலகில் எத்தனை எத்தனை வேதங்களைத் தோற்றுவிக்கின்ற அருளாளர்கள் தோன்றினாலும் அவர்களால் கடவுளைச் சந்திக்க முடியாது, முடியாது, முடியாது, முடியவே முடியாது என்று கூறுகின்ற ஒரே ஒரு வேதம் -தெய்வீகச் செம்மொழியுமான முத்தமிழ் மொழியில் ஆதிசிவனார் அருளிய இந்துவேதம்தான்.

புதன், 23 ஏப்ரல், 2014

நடராஜ தத்துவம்


பிரபஞ்சத்தின் உருவாக்கத்தையும், அழிவையும் தீர்மானிக்கும் சக்தி சிவனே. பிரபஞ்சமானது முடிவில்லாத பல காலச் சக்கரங்களைக் கொண்டது. ஒவ்வொரு காலச் சக்கரத்தையும், ஆனந்த நடனமாடி அந்த காலக் சக்கரத்துக்கு உரிய அண்டத்தை உருவாக்கி, தொடர்ச்சியாக நடனத்தின் மூலம் அந்த அண்டத்தை விரிவாக்கி, பின்னர் காலச் சக்கரம் முடிவுக்கு வரும் போது ஊழித் தாண்டவமாடி அந்த அண்டத்தை ஒடுக்கி அழிப்பது சிவனே.

இதுவே நடராஜரின் பிரபஞ்ச இயக்கத் தத்துவம்.

நடனத்தின் தலைவனாகிய சிவன், நடராஜராக பரத முனிவர் முன் தோன்றி, 108 தாண்டவங்களையும், 108 கரணங்களையும் ஆடிக் காட்டினார்.

திருமுகம் : எல்லையற்ற அழகும் இனிய தண்ணளித் திறனும் கொண்டு தலைமைப்பாட்டினைக் குறிக்கும்.

பனித்தசடை: சடை சிவநெறிக்குரிய தவ ஒழுக்கச் சிறப்பையும் காட்டுகின்றது.

கங்கை: இறைவனின் பேராற்றலையும் வேகங்கெடுத்தாளும் வித்தகத்தையும் விளக்குவது.

பிறைசூடுதல்: சரண் என அடைந்தவரைத் தாங்கித் தாழ்வு நீக்கிப் பாதுகாக்கும் வள்ளல்தன்மை.

குனித்த புருவம்: பரதக் கலையின் மெய்ப்பாடு உணர்த்துவது. தன்பாற்போந்து குறையிரந்து முறையிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தினைக் காட்டுவது.

குமிண்சிரிப்பு: அடைக்கலம் புகுந்தோரை, என்று வந்தாய் என்று அருளோடு வரவேற்று, பிழைபொறுத்து வாழ்வளித்து மகிழ்விக்கும் மாட்சியைக் குறிப்பது.

பவளமேனி: இறைவன் நெருப்பை யொத்தவன். நெருப்பு தன்பால் எய்தும் பொருள்களை எல்லாம் தூய்மையாக்கிப் புனிதம் அடையச் செய்வது போல, இறைவனும் தன் அடியார்களின் மாசுக்களை நீக்கி - மலம் நீக்கி மாண்புறச் செய்யும் அருட் திறத்தைக் குறிப்பது.

பால்வெண்ணீறு: எப்பொருளும் இறுதியில் எய்தும் நிலை சாம்பல்தானே! நீறு மற்றொன்றாக மாறி அழியாது. ஆகவே பால்வெண்ணீறு தூய இயல்பினையும் அழியாத் தன்மையையும் குறிக்கின்றது. தொழுதெழுவார் வினைவளம் நீறெழ இறைவன் நீறு அணிகின்றார். மேலும் செந்நிற மேனியில் வெண்ணீறு அணிந்த கோலம் எவர் நெஞ்சையும் கவர்ந்து பிணிக்கும் பான்மையுடையது.

நெற்றிக்கண்: மேல் நோக்கிய நிலையில் நிமிர்ந்து நிற்கும் நெற்றிக்கண் சிவபிரானின் தனிப்பெரும் முதன்மையை உணர்த்துவது. இது சிவபெருமானுக்குரிய சிறப்பு அடையாளம்.

நீலகண்டம்: ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டும் இருந்தருள் செய்யும் இறைவனின் நயத்தக்க நாகரிக நலனையும் பெருங்கருணைத் திறத்தையும் காட்டுவது.

உடுக்கை: தமருகம் எனப்படும் உடுக்கை, இறைவன் உலகப் பொருள்களைப் படைக்கும் சிருஷ்டியைக் குறிப்பது. பரநாதத்தைப் பரமன் தோற்றுவிக்கும் பான்மையை இது காட்டுகிறது.

நெருப்பு: இறைவன் இடக்கரத்தில் ஏந்தியுள்ள நெருப்பு. உயிர்களின் பிறவித் தளைகளின் இளைப்பினை நீக்கும் பொருட்டுச் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது.

அபயகரம்: காத்தல் தொழிலைக் குறிப்பது. அடியார்களுக்கு ஆறுதல் கூறித் தேற்றும் நிலை இது.

வீசியகரம்: யானையின் துதிக்கையைப் போன்று திகழும் இவ்விடக்கை கஜஹஸ்தம் எனப்படும். இக்கையின் விரல், தூக்கிய திருவடியைக் காட்டுகின்றது. "திருவடியை நம்பித் தொழுக. இது உம்மை ஈடேற்றும்' என்று உணர்த்துகிறது.

எடுத்த திருவடி: இறைவனின் இடது திருவடி இது. அம்பிகைக்கு உரியது. துன்பக் கடலிடைத் தோணித் தொழில் பூண்டு தொண்டர் தம்மை இன்பக் கரை முகந்து ஏற்றும் திறத்தைக் காட்டுவது.

ஊன்றிய திருவடி: இறைவனின் வலது திருப்பாதம் இது. முயலகனை மிதித்து அவன் மீது ஊன்றிய நிலை. மலத்தை முழுதாக அழித்து விடாமலும், மலத்தால் உயிர்கள் பெரிதும் வருந்தாமலும், வினைப் பயன்களை உயிர்கள் நுகர இறைவன் இயற்றும் மறைத்தல் தொழிலைக் குறிப்பது.

முயலகன்: இது ஆணவ மலத்தைக் குறிப்பது.

தெற்குநோக்குதல்: ஆடவல்லான் தெற்கு நோக்கியே ஆடுகின்றார். யமபயத்தை நீக்கியருளி நம்மை உய்விப்பதற்காக தென்றல் காற்றின் மீதும் தென் தமிழின் மீதும் உள்ள விருப்பாலும் தெற்கு நோக்கி இறைவன் ஆடுகின்றார் என நயம்படக் கூறுவார் திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி

முனிவர்.

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” திருவாசகம்…!!!



மாணிக்கவாசகரால் பாடப்பட்டு இறைவனால் எழுதப்பட்டது என்ற சிறப்பினைக் கொண்ட ஒரு நூல்.

“திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்பது மிகைப்படுத்தப் பட்ட கூற்று அல்ல என்பதினை இந்நூலினைப் படித்தோர் அறிவர்.”

சரி அது அப்படியே இருக்கட்டும். பிழையில்லை… ஆனால் நம்முடைய கேள்விக்கு பதில் இந்த நூலினில் இருக்கின்றது என்று சொன்னீர்களே அது எங்கே?
ஏன் தமிழ்நாட்டில் மட்டும் அந்தச் சமயங்கள் வளர்ந்தன… தமிழில் அவ்வாறு என்ன இருக்கின்றது?” என்று கேட்கின்றீர்களா…

இதோ மாணிக்கவாசகரின் பதில்.

“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

தமிழர்களின் சிந்தனை எப்பொழுதும் பரந்து விரிந்தது. இதனை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” போன்ற கூற்றுகளின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

ஆனால் இங்கே மாணிக்கவாசகரோ எந்நாட்டவர்க்கும் இறைவா என்றுக் கூறினாலும், இறைவனை தென்னாடுடையவன் என்று சிறப்பாகக் கூறுகின்றார். அவர் அவ்வாறு சொல்ல வேண்டியக் காரணம் என்ன?
அவரின் இந்தக் கூற்று சரியான ஒன்றா?

“அட என்னங்க… மாணிக்கவாசகர் தமிழகத்தை சேர்ந்தவர்… அதனால் அவர் ’தென்னாடுடைய சிவனே’ என்று கூறி இருக்கின்றார்… இதுவே ஒரு வடநாட்டினைச் சேர்ந்த ஒருவர் எழுதி இருந்தால் அவர் ‘வடநாட்டினை உடைய சிவனே” என்று தான் கூறி இருப்பார். அப்படி என்றால் இறைவன் வடநாட்டினை மட்டும் சேர்ந்தவர் ஆகி விடுவாரா?… இறைவன் முழு உலகத்திற்கும் உடையவர்” என்றுக் கூறுகின்றீர்களா. உங்களின் கவனத்திற்கு,

ஒருக் கருத்து உண்மையான கருத்து ஆக வேண்டும் என்றால் அது எல்லா நிலையிலிலும் நிலைத்து நிற்க வேண்டும்.எல்லா நிலைக்கும் பொருந்த வேண்டும். இப்பொழுது ‘தென்னாடுடைய’ என்னும் சொல் ‘தெற்குத் திசையில் உள்ள ஒரு நாட்டினைக்’ குறிப்பதாக இருந்தால் அந்த நாடு இடத்திற்கு இடம் மாறுபடுவதாக அமைந்து விடும்.

சீனத்திற்கு தென்னாடு வடஇந்தியா.

வடஇந்தியாவிற்கு தென்னாடு தமிழகம்.

தமிழகத்திற்கு தென்னாடு ஆப்பிரிக்கா.

இப்படியே அந்தக் கருத்து அர்த்தமில்லாத ஒருக் கருத்து ஆகி விடும். எனவே மாணிக்கவாசகர் அந்த அர்த்தத்தினில் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை பயன் படுத்தவில்லை.

மாணிக்கவாசகர் ’தென்னாடுடைய’ என்னும் சொல்லினை ‘தென்னவனின் நாட்டினைச் சிறப்பாக உடைய’ என்னும் அர்த்தத்தினில் பயன் படுத்தி இருக்கின்றார்.

‘தென்னவனின் நாடா???”

சற்று விளக்கமாகப் பார்ப்போம். இங்கே தான் மொழி அறிஞர்கள் நம் உதவிக்கு
வருகின்றார்கள்.

தென்னவன் என்றச் சொல் பாண்டியனைக் குறிக்கும். பாண்டியன் என்பதின் அர்த்தம் ‘பழைய நாட்டினை ஆண்ட மன்னன்’ என்பதே ஆகும். ‘பாண்டி’ என்றால் ‘பழைய’ என்றும் தமிழில் அர்த்தம் இருக்கின்றது.
எனவே ‘தென்னாடு’ என்றால் ‘பாண்டியனால் ஆளப்பட்ட பழைய நாடே ஆகும்’. சிவன் அந்த நாட்டினில் சிறப்பாக இருக்கின்றார் என்றே மாணிக்கவாசகர் கூறுகின்றார்.

“பழைய நாடா???” - பாண்டியன் மதுரையை அல்லவா ஆண்டான் என்று கூறுபவர்களுக்கு, இப்பொழுது இருக்கும் மதுரை மூன்றாவது மதுரை. இதற்கு முன்னர் இருந்த இரு மதுரைகள் கடற்கோள்களினால் அழிந்துப் போயின. அது வரலாறு!!! குமரிக்கண்ட வரலாறு!!! மாணிக்கவாசகர் ‘தென்னாடு’ என்றுக் குறிப்பிடுவதும் இந்த குமரிக்கண்டத்தையேதான்.

ஏன் சிவனை ‘குமரிக்கண்டத்தை சிறப்பாக உடையவன்’ என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

ஏனெனில், இறைவன் மனிதனை முதன் முதலில் படைத்தது இக்கண்டத்திலேயே தான்.

ஏன் இறைவனைப் பற்றிய எழுச்சி தமிழகத்தில் தமிழில் எழுந்தது?

ஏனெனில், உலகின் முதல் மனிதன் தமிழன். அவன் இறைவனிடம் பேசிய மொழி தமிழ்!!! இவை தான் அந்தக் கேள்விகளுக்கு பதில்… நிற்க!.

இப்பொழுது புதிதாய் பல கேள்விகள், மறுப்புக் கருத்துக்கள், விமர்சனங்கள் நிச்சயம் உங்கள் மனதில் தோன்றி இருக்கும். அவற்றிற்கு அறிவியல் பூர்வமாகவும், வரலாற்று செய்திகள் மூலமாகவும் விடையினை நாம் மெதுவாகப் பார்க்கப் போகின்றோம். அதற்கு முன்னாள் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் சில இருக்கின்றன.

ஒன்று:
இன்று அறிவியல், மனிதகுலம் தோன்றி இருக்க கூடும் என்று எண்ணும் இடம், இன்றைக்கு ஆப்பிரிக்காவிற்கும் ஆசுதிரேலியாவிற்கும் இடையில் இருக்கும் இந்து மகாக்கடலே ஆகும். உயிர் தோன்ற அங்கே இருந்த சூழலே சரியாக இருந்து இருக்கும் என்று அறிவியல் எண்ணுகின்றது.
அந்த இடம் நம் தமிழ் இலக்கியச் செய்திகளில் குமரிக்கண்டம் எங்கே இருந்தது என்றுக் கூறப்படுகின்றதோ அதே இடத்துடன் ஒத்துப் போகின்றது.

குமரிக்கண்டம், இந்தியா- ஆசுதிரேலியா-ஆப்பிரிக்கா ஆகிய இந்த மூன்று நிலங்களையும் இணைத்துக் கொண்டு இருந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு என்பது ஒருக்கருத்து.

இந்தக் கருத்து சில ஆராய்ச்சிகளால் நிரூபணம் ஆகிக் கொண்டு இருக்கின்றது. உதாரணமாய் ஆசுதிரேலியாவில் உள்ள பழங்குடி மக்களின் மொழியினைப் பற்றிய ஆராய்ச்சியில் அம்மொழி தமிழினை ஒத்து இருக்கின்றது என்பது நிரூபணம் ஆகி இருக்கின்றது.
அவர்கள் ஒரு பெண்ணினைக் கூப்பிட ‘பூனங்காஇங்கவா’ என்றுக் கூறுகின்றார்கள்.
இது ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதின் மருவு தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இரண்டு:
எந்த ஒரு சமயத்திற்கும் மட்டும் உரியதாக இல்லாமல் அனைத்து சமயங்களையும் அரவணைத்துக் கொண்டு நிற்கும் மொழி உலகில் தமிழன்றி வேறு இல்லை. தமிழில் மட்டுமே அனைத்து சமயங்களுக்கும் மூல நூல்கள் தோன்றியுள்ளன. மொழிப்பெயர்ப்பது வேறு. அந்த மொழியினைக் கற்றுக் கொண்டு அம்மொழியினில் தங்களின் சமயத்தினைப் பற்றி எழுதுவது வேறு.
தமிழில் உலகில் உள்ள பெரு மதங்கள் அனைத்திற்கும் மூல நூல்கள் உள்ளன.

சைவம் - பன்னிரு திருமுறை

வைணவம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்

சமணம் - சிலப்பதிகாரம்

பௌத்தம் - சீவக சிந்தாமணி

கிருத்துவம் - தேம்பாவணி

இசுலாம் - சீறாப்புராணம்

உலகில் உள்ள வேறு எந்த மொழிக்கும் இந்தப் பெருமை இல்லை!!! மேலும் தமிழ் ஆன்மீக மொழியாக மட்டும் இல்லாமல் அறிவியல் மொழியாகவும் திகழும் பாங்கும் இங்கு கவனிக்கத்தக்கது.

புதன், 9 ஏப்ரல், 2014

ஆலயங்கள் 3

ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை.. முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா? அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் ‘எர்த்’ ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன

சிவ தாண்டவம்

1, பாண்டுரங்க நடனம் – முப்புரம் எரிக்க முற்பட்டபோது பிரமன் தேரோட்டியாக இருந்தார். கலங்கிய கலைமகளை தேற்றி கலக்கத்தை போக்க ஆடியது {திருவதிகை} கொடிகுகாட்டி நடனம்-திரிபுரம் எரித்த பின் ஆடியது.
2, கொடுகொட்டி நடனம் – திரிபுரம் எரித்த பின் மகிழ்ச்சியோடு தாளமாட சிவனார் தன் கரங்களை கொட்டி ஆடியது.
3, சந்தியா நிருத்தம் – ஆலகால விஷம் உண்டு. அறிதுயிலில் இருந்த சிவன், தேவர்கள் வழிபட்ட பின் மறுநாள் பிரதோஷத்தில் {திரயோதசி திதி} டமருகம் ஏந்தி, சூலத்தை சுழற்றி ஒரு ஜாம நேரம் ஆடியது.
4, சண்டா தாண்டவம் – திருவாலங்காட்டில் காளியின் செருக்கை அடக்க, பைரவர் மூர்த்தங்கொண்டு ஆடியது.
5, கௌரி தாண்டவம் – தாருகாவனத்தில் மோகினி வடிவெடுத்த திருமாலுடன் ஆடியது போல கௌரிக்கு கயிலையில் ஆடிக்காட்டியது.
6, வீரட்டகாச நடனம் – குமரக்கடவுள் பிரணவப் பொருளை உணர்த்தியபோது தானும் குமரனும் ஒன்றே என்று வீரம் புலம்பட ஆடியது.
7, ஆனந்த தாண்டவம் – பதஞ்சலி, வியாக்ரபாதர் காண சிவகாமியம்மை உளம் மகிழ முயலகன் முதுகுமிதித்து சிதம்பரத்தில் ஆடியது.
8, அனவரத நடனம் – ஆன்மாக்களுக்குப் போக முக்திகளை அளிக்கும் பொருட்டு படைப்பு முதலான செயல்களை செய்து எப்போதும் ஆடும் நடனம்.
9, மஹா சங்கர நடனம் – மஹா பிரளய காலத்தில் உலகம் அனைத்தும் பராசக்தியில் ஒடுங்க, பராசக்தி பரமசிவத்தில் ஒடுங்க, பரமசிவன் ஒருவனே தானாக இருந்து ஆடியது.
நடராஜர் சுற்றி திருவாசி உள்ளது. அதில் 51 சுடர்கள் இருக்கும். திருவாசி என்பது ஓம் என்ற பிரணவ மந்திரத்தையும் 51 சுடர்கள் 51 எழுத்துக்களையும் சுட்டிக்காட்டக்கூடியது. ஆண் ஆடுவது – தாண்டவ நடனம், பெண் ஆடுவது – லாஸ்ய நடனம். நடராஜர் கால்மாறி ஆடியது மதுரை, கீள்வேளூர், திருவக்கரை. தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் நிறுத்துவது வக்ர தாண்டவம் ஆகும்.
ஈசன் நடனம்
1, மதுரை – வரகுன பாண்டியனுக்கு காலமாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.
2, கீள்வேளூர் – அகத்தியருக்கு 10 கைகளுடன் நடராஜர் கால்மாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.
3, திருவாலங்காடு, சிதம்பரம் – இறைவன் காளியுடன் நடனமாடியது.
4, மயிலாடுதுறை – அம்பாள் மயில் வடிவம் கொண்டு ஈசன் முன்பு கௌரி தாண்டவம் ஆடினார்.
5, திருப்புத்தூர் – சிவன் லட்சுமிக்கு கௌரி நடனத்தை ஆடி காட்டியது.
6, திருவிற்கோலம் – காளி அம்மன் ஆலங்காடு பெருமானோடு தர்க்கித்து ரக்ஷா நடனம் ஆடி மகா தாண்டவம் ஆடியது.
7, திருவாவடுதுரை – இறைவன் வீர சிங்க ஆசனத்தில் சுந்தர நடனம் மகா தாண்டவம் ஆடியது.
8, திருக்கூடலையாற்றார் – பிரம்மனுக்கு நர்த்தனம் செய்து காட்டியது.
9, திருவதிகை – சம்பந்தருக்கு இறைவன் திருநடனம் ஆடிகாட்டியது. இறைவி பாட இறைவன் ஆடியது.
10, திருப்பனையூர் – ஊரின் புறந்தே சுந்தரமூர்த்திக்கு நடன காட்சி தந்தது.
11, திருவுசாத்தானம் – விஸ்வாமித்திரருக்கு நடன காட்சி தந்தது.
12, திருக்களர் – துர்வாச முனிவருக்கு பிரம்ம தாண்டவம் ஆடி காட்டியது.
13, திருவான்மியூர் – வான்மீகி முனிவர்க்கு இறைவன் பிரம்ம தாண்டவ நடன காக்ஷியும் கல்யாண காட்சியும் அருளியது.
14, கொடுமுடி – சித்ரா பௌர்ணமியில் பரத்வாச முனிவருக்கு நடராஜர் சதுர்முகத்தாண்டவ நடன காட்சி அருளியது.
15, திருமழபாடி – மார்கண்டேயருக்கு மழு ஏந்தி நடன காட்சி தந்தது.
16, கஞ்சனூர் – பராசர முனிவர்க்கு முக்தி தாண்டவம் அருளியது.
17, திருக்காறாயில் – பதஞ்சலி முனிவருக்கு 7 வகை தாண்டவங்களை காட்டியது. கபால முனிவருக்கு காட்சி தரல்.
18, அரித்துவார மங்களம் – உபமன்யு மகரிஷிக்கு இறைவன் திருநடனமாடி அருள் புரிந்தது.
19, திருவொற்றியூர் – மாசி மாதத்தில் நந்திக்கு நாட்டிய காக்ஷி.
20, திருக்கச்சூர் – திருமாலுக்கு நடன காட்க்ஷி தியாகராஜர் அருளியது.
21, திருப்பைஞ்ஜிலி – வசிட்ட முனிவர்க்கு நடராஜர் நடன காட்க்ஷி அருளியது.
22, கொடுமுடி, கூடலையாற்றூர், திருகளர், திருமுருகன்பூண்டி – பிரம்மனுக்கு ஈசன் நடன காட்க்ஷி.
23, திருத்துறைபூண்டி – நடராஜர் சந்திர சூடாமணி தாண்டவமாடுகிறார். அகத்தியர் நடனத்தை கண்டும் வேதாரயேஸ்வரரின் மணக்கோலத்தையுக் கண்டார்.
சிவ தாண்டவம்:
சிவபெருமான் காளிகா தாண்டவம் ஆடுவது எப்போது?காளிகா தாண்டவம் – படைத்தல் செய்யும் போது. தலம் – நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி. ஆடிய இடம் – தாமிர சபை (Copper)

சிவபெருமான் சந்தியா தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு? 
சந்தியா தாண்டவம் – காத்தல் செய்யும் போது. தலம்- மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை. ஆடிய இடம் – வெள்ளி அம்பலம் (Silver)

சிவபெருமான் சங்கார தாண்டவம் ஆடுவது எப்ப்போது?
சங்கார தாண்டவம் – அழித்தல் செய்யும் போது. தலம்- மதுரை என்கிறார்கள் சிலர்.தெரிந்தால் சொல்லவும்.

சிவபெருமான் திரிபுர தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
திரிபுர தாண்டவம் – மறைத்தல் செய்யும் போது. தலம்- குற்றாலநாதர் கோவில், குற்றாலம். ஆடிய் இடம் – சித்திர(Art) சபை.

சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
ஊர்த்தவ தாண்டவம் – அருளல் செய்யும் போது. தலம்- ஊர்த்தவதாண்டவர் கோவில், திருவாலங்காடு, ஆடிய இடம் – இரத்தின(gem) சபை.

சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
ஆனந்த தாண்டவம் – இவ்வைந்து செயல்களையும் செய்யும் இடம். தலம்- நடராஜர் கோவில், சிதம்பரம். ஆடிய இடம் – கனக (Sky) சபை.

சிவபெருமான் கௌரி தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?
கௌரி தாண்டவம் – பார்வதிக்காக ஆடிய போது. தலம்- திருப்பத்தூர்.

சிவ நடனம் :
அஜபா நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
அஜபா நடனம்- சிவபெருமான் மேல்மூச்சில், கீழ்மூச்சில் (தவளை போல்) அசைந்தாடிய நடனம். ஆடிய தலம்- திருவாரூர். 

உன்மத்த நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
சிவபெருமான் பித்தனைப் போல் தலை சுற்றி ஆடிய நடனம் உன்மத்த நடனம் ஆகும். ஆடிய தலம்- திருநள்ளாறு.

தரங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
தரங்க நடனம் என்பது கடல் அலைபோல் அசைந்து ஆடுவது. இதை சிவபெருமான் நாகப்பட்டினத்தில் ஆடினார். 
குக்குட நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
குக்குட நடனம் என்பது கோழி போல் ஆடுவது. ஆடிய தலம் – திருக்காறாயில்.

பிருங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
பிருங்க நடனம் என்பது வண்டு மலரைக் குடைவது போல் ஆடுவது. இதை சிவபெருமான் ஆடியது இடம் திருக்கோளிலி ஆகும்.

கமல நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
கமல நடனம் என்பது தாமரை காற்றில் அசைவது போல் ஆடுவது. ஆடிய தலம்-திருவாய்மூர்.

ஹம்சபாத நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?
ஹம்சபாத நடனம் என்பது அன்னம் போல் அடியெடுத்து ஆடுவது. ஆடிய தலம் – திருமறைக்காடு (வேதாரண்யம்)

அன்பே சிவம்

* இறைவன் ஒருவனே என்றாலும், எண்ணற்ற தோற்றங்களில் அவன் காட்சி தருகிறான். அனைத்து உயிர்களையும் படைத்து காத்து அருள்புரிபவன் அவனே.
* ஒவ்வொருவரும் இறைவனின் திருநாமத்தை உச்சரிக்கின்றனர். ஆனால், உள்ளத்தில் அன்பு இல்லாமல் வெறும் உச்சரிப்பால் மட்டுமே அவனை அடைய முடியாது.
* செல்வச்சீமான் என்றாலும், நாடாளும் மன்னன் ஆனாலும் எல்லா உயிர்களும் இறைவன் முன் சமமே. சிறு எறும்பும் இறைவனின் அன்புப்படைப்பே.
* சகதி நிறைந்த சேற்றில் பிறக்கும் தாமரை, அதிலிருந்து எப்படி விலகி இருக்கிறதோ, அதுபோல வாழ்வில் பட்டும் படாமலும் இருக்கப் பழகுங்கள்.
* நன்மை செய்தவர்க்குத் திருப்பி நன்மை செய்வது உலக இயல்பு. ஆனால், தீமை செய்தவர்க்கும் நன்மை செய்வது உத்தமருக்குரிய உயர்ந்த குணம்.
* பொறுமையை விடச் சிறந்த தவம் வேறொன்றும் உலகில் இல்லை. திருப்தியை விடச் சிறந்த இன்பம் இல்லை. மன்னிப்பதை விட மகத்தான ஆயுதம் வேறில்லை. இவற்றை வாழ்வில் கடைபிடியுங்கள்.

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழையலாமா?

மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலில் பிரவேசிக்கவோ தரிசனம் செய்யவோ கூடாதென்று ஆண்கள் கூறினால் அவர்களை பெண்களை எதிர்ப்பவர்கள் என்று கருதி விட வேண்டாம்.

இந்த நாட்களில் பெண்களுக்கு தனி அறையும் படுக்கையும் அளித்திருந்த முன் தலைமுறை அந்நாட்களை அசுத்தத்தின் நாட்களாகக் கருதியிருந்தனர். இந்நாட்களில் பெண்கள் கோயில் தரிசனம் என்ன, வீட்டின் முன்பக்கம் வருவதும், தூய மூலிகைச் செடிகளின் பக்கம் வருவதும் கூட தடை செய்யப்பட்டு வந்தன. ஆண்களின் அருகாமையும் அனுமதித்திருக்கவில்லை.

சபரிமலை போன்ற கோயில்களில் தரிசனத்துக்காக விரதம் பூண்டிருக்கும் ஆண்கள், வீட்டிலுள்ள பெண்களின் மாதவிடாய்க் காலத்தில் தங்கள் உணவை வீட்டிற்கு வெளியில் சுயமாக தயார் செய்து உண்பதும் வழக்கமாயிருந்தது.

மாதவிடாய்க் காலத்தில் பெண்களின் உடல் வெப்பம் மாற்றமடைகின்றது. இந் நேரங்களில் கோயில் தரிசனம் செய்தல் இந்த வெப்ப மாற்றம் காரணமாக தேவ பிம்பத்தையும் பாதிக்கும். ஜீவ சக்தி நிறைந்த தெய்வீகத்திலும் இந்த மாற்றம் நிகழாமலிருக்கவே மாதவிடா நாட்களில் பெண்கள் கோயிலுக்குள் நுழையலாகாது என்று கூறுவது.

பட்டுப்பூச்சிகளை வளர்க்குமிடத்தில் மாதவிடாய் கொண்ட பெண்கள் சென்றால் அதன் புழுக்கள் மாண்டு போவதாக விஞ்ஞானம் நிரூபித்திருக்கின்றது. அதாவது சிறு வெப்ப மாற்றமும் இப்புழுக்களை பாதிக்கின்றது என்று புரிந்து கொள்ளலாம்.தன் உடலில் பட்டு நூலை உருவாக்கி வலைகள் உண்டாக்கி அதனுள் சமாதியிருக்கும் புழுக்களைப் போலவே கோயிலைப் பொறுத்தவரை இறையின் நிலையும். இவ்வாறு திவ்ய ஜீவ சக்தியை பாதிக்காமலிருக்கவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடவுளை அடையும் மார்க்கத்தை நமக்கு அறிவிக்கும் குருவையே நாம் கடவுள் என எண்ணி வழிபட்டு சிவப்பரம் பொருளை மறப்பது எவ்வகையில் நியாயம்?

உலகத்தின் முழுமுதல் பொருள் ஒன்றே. அதை நாம் சிவம் என அழைக்கிறோம். இந்த சிவமே பல தெய்வ உருவில் காட்சியளிக்கும். எந்த தெய்வ உருவை வணங்கினாலும் சிவம் என்னும் முழுமுதல் கடவுளை வணங்கியது போன்றதுவே. 

சைவர்களாகிய நாம் சிவப்பரம் பொருளையும் அதன் பிறவடிவங்களையும் வணங்கி இறையருள் பெறுகிறோம். இந்த இறைவனை வழிபடுவதற்கு உரிய மார்க்கங்களை அறிவதற்காக குருவை நாடுகிறோம். குரு என்பவர் தன் கல்வி கேள்விகளினாலும் உரிய பாதையில் வாழ்வை மேற்கொண்டமையாலும் இறைவனை அடைதலுக்குரிய மார்க்கத்தை காட்டுவார். அந்த மார்க்கத்தை அறிந்த நாங்கள் சிவப்பரம் பொருளை வழிபட்டு உய்தி அடைவதையே சைவசமயம் நமக்கு கூறுகிறது.

ஆனால் கடவுளை அடையும் மார்க்கத்தை நமக்கு அறிவிக்கும் குருவையே நாம் கடவுள் என எண்ணி வழிபட்டு சிவப்பரம் பொருளை மறப்பது எவ்வகையில் நியாயம்?

பக்தருக்கு வழிகாட்டும் கடமை கொண்ட குரு, தானே கடவுள் என்ற மாயையை அந்தப் பக்தர்களுக்கு உருவாக்கி அவர்களை சிவப்பரம் பொருளையை மறக்க வைத்தல் எவ்வகை நியாயம்?

இந்த உண்மைகளை வெளிப்படுத்த இந்துசமயப் பிரசங்கம் செய்வோர் தயங்குவது எவ்வகை நியாயம்?

ஆலயங்களில்

ஆலயங்களை மலைகள் மீதும், கடற்கரையிலும், மூலிகைகள் அடங்கிய சொலைப்பகுதிகளிலும், அருவிக்கரையிலும், ஆற்றங்கரையிலும் கட்டி இருக்கிறார்கள். இந்த இடங்களில் உள்ளத்தூயமையும் உடல் நலமும் கிட்டுகிறது. இதற்காகத்தான் ஆறுகால அபிசேகங்கள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்றன. அர்ச்சனைகளும் ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன. இதன் விளைவாக விக்கிரத்தில் தொடர்ந்து அதிர்வுகள் நிலைத்திருக்கும். ஆலயத்தில் உள்ள கர்ப்பகிருகத்தின் அமைப்பு இதனை சேமித்துப் பாதுகாக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. மூலவிக்கிரகம் ஒலி அலைகளின் எதிரொலியை எழுப்பவில்ல விதத்தில் அமைந்துள்ளது. அடியில் பொருத்தப்பட்டுள்ள எந்திரத்தகடு ஆற்றல சேமிப்புக்கலனாகவும் காற்று மண்டலம் அந்த சக்தியை ஏற்றிச் செல்லும் முறையிலும் முறையிலும் அமைந்துள்ளன. இதன் முழுப்பலனும் வழிபடவரும் பக்தர்களுக்கு போய்ச் சேர்கிறது. அவர்கள் இவற்றை ஏற்பவர்களாக (Receiver) விளங்குகிறார்கள்.
கர்ப்பக்கிருகத்தில் உள்ள காற்றுமண்டலத்தில் பிராணவாயு அழுத்தம் அதிகரிக்கிறது. அந்தக் காற்று மண்டலம் பிராணவாயுக் கூறுகளை அதிகமாக பெறுவதால் பதர்களின் உடல்நலம் சீர்பெற உதவும். ஒலியின் திசைவேகம் ஈரப்பததில் அதிகமாக இருக்கும். ஆகையால் எப்போதும் அபிசேக நீரினால் ஈரமாகவே உள்ள கர்ப்பக்கிருகம் இந்த நிலையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.
ஆலயங்களின் அமைப்பும் அதன் உள்ளமப்பும் இவ்வாறு வேதாந்தபூர்வமகவும், விஞ்ஞானபூர்வமாகவும் கணிக்கப்பட்டே அமைந்திருக்கின்றன. இதனால் மனிதர்களுக்கு உடல்நலமும், உள்ளவளமும் கிடைக்கின்றது.

ஆலயங்களில் 1

ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை.. முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..?! ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா? அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் ‘எர்த்’ ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன

சைவ தமிழின் தொன்மை

சைவ தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட. ஆனாலும் உலகு முழுதும் எம் தொன்மையையும் வல்லமைகளையும் கண்டு எப்படியாவது சைவதமிழினத்தைப் பிரித்து ஆண்டு நிரந்தர அடிமைககளாக்கிப் பயன் பெற்று தம் வாழ்வை மேம்படுத்த வசதியாக இனத்தின் கட்டுக்கோப்பைப் பூண்டோடு அழித்துவிடக் கங்கணம் கட்டி நிற்கிறது. நாம் எமது வல்லமைகளைப் புரிந்து கொண்டு பிரயோக சாத்தியக்கூறு உள்ள பொதுவான தளத்தை அடையாளங் கண்டு அதில் நிலை எடுத்து உலகை ஆள முடிந்தாலும் ஆச்சரியம் இல்லை.உதாரணமாகக் கல்வி தமிழருக்கு பொதுவான தளமாக இருந்தாலும் கூட அட்சரங்கள் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி கற்கும் வாய்ப்பைத் தவிர்த்து விட்டு படித்த முட்தாள்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற படிப்பித்தல் முறைகளையே நாம் நாடி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
உலகின் முதல் நாகரிக மாந்தன், எத்தனை ஆண்டுகளானாலும் அழிய முடியாத பண்பாட்டைக் கொண்டவன், உலகின் முதல் நகரை அமைத்தவன், உலக மக்களுக்கு எல்லாவற்றையும் கண்டுபிடித்துக் கொடுத்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக உலகிற்கு உன்னத மொழியை தந்தவன் என்று சைவதமிழனின் பெருமை பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். அத்தோடு உயிர்மெய்த் தத்துவத்தைக் கண்டறிந்து உலக மக்களின் உயரிய வாழ்வுக்கான வழிவகைகளைச் சொன்னவனும் சைவ தமிழனே என்றால் மிகையாகாது.
ஆனாலும் நாம் எம் சிறப்பை அறிந்துவிடாதிருக்க எம்மையே முட்டாள்களாக்கி, திசைதிருப்பி குமரிக்கண்டம் என்னும் ஒரு சிறிய வட்டத்துள் சுழல விட்ட மேற்குலகின் தந்திரமான செயலை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை. ( நம் வரலாற்றை அழிக்க நினைத்தவர்கள் செய்த சதி)

அதற்க்கு சாமரம்வீசிக்கொண்டு சைவதம்மினத்தின் சிறப்பறியாது தம்மைத்தாமே சிறப்புறச் செய்வதாக எண்ணித் தாழ்த்தும் தமிழரை நினைத்து வேதனை கொள்ளாதிருக்கவும் முடியவில்லை.
நான் எழுதியதன் நோக்கம்

, உலகில் உன்னதமாய் வாழ்ந்த சைவ இனம் இன்று உலகின்முன் உருக்குலைந்து கிடந்தும் ஒருவர்கூட எம்மினத்தின் தொன்மையை மற்றவர் முன் நிறுவவோ அதைக் காக்கவோ முனையவில்லை. நாம் மட்டுமே எமக்காகப் போராடி எம்மை முன்னிறுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். ஒரு சிறிய தீப்பொறியே பெருநெருப்பை உண்டாக்க வல்லது. கற்றவர்கள் நிறைந்திருக்கும் தமிழ் சமூகத்தில் கற்றவர்களே சைவ தமிழுக்கு எதிரிகளாய் உள்ளனர்.
இதை வாசிப்போருள் ஒருவரோ ஒரு சிலரோ எம் தொன்மையைப் புரிந்துகொண்டு ஏதாவது செய்வதற்கு முன்வர மாட்டார்களா?? என்னும் நப்பாசைதான் என்னை இதை எழுதத் தூண்டியது. சங்கம் வைத்துத் சைவதமிழ் வளர்த்த சைவ தமிழர் தம் அடிமனதில் இன்னும் தம் இனத்தை உயர்த்திப் பார்க்கும் ஆசை கொண்டிருப்பார். அவர் தம் தொன்மையைக் கண்டறிந்து உலக நாடுகள் முன் அதை நிறுவித் சைவ தமிழரை மீண்டும் தலை நிமிரச் செய்ய வேண்டும் என்பதே என் அவா.-


தமிழா உனக்குப் பிச்சைப்போட யாரும் இல்லை : தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர். அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை. இதை உணர்ந்தால் நீயும் உயரலாம், உன்னோடு சேர்ந்த சிவத்தமிழ்ப் பண்பாடும் மேன்மையுறும்.

வீரம் செறிந்த மண்ணிலே இன்றைய நிலை என்ன? தமிழுக்குச் சோதனை.தமிழனுக்கு மாற்றான் புகுந்து இனத்தால் மொழியால் சுயநலத்தால் நம்மை வேறுபடுத்தி சின்னா பின்னுமாய் உருவாக்கிக் கொண்டு ஆட்டிப் படைக்கிறார்கள்.விடிவு கேளவிக்குறியாக உள்ளது.

தமிழ் மொழியே அதி சுலபமாக சுத்த சிவானு பூதியைக் கொடுக்க வல்லது

தமிழ் என்பது த்-அ-ம்-இ-ழ் என்னும் ஐந்து அலகு நிலையுடையது. 

அ - அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார ஐம்பூதத்திற்குள் பதி நிலையக்கரமாகும்.

இ - பதியைவிட்டு விலகாத சித்தை விளக்குவதால் அனந்தாகார பேதங்காட்டும் உயிர்ச்சித்த கலையக்கரமாம்.

பதி சித்தாத்ம கலைகளுக்காதாரமாகி உயிரினுக்கு உடலையொத்துக் குறிக்கப்படும். த்-ம்-ழ் எழுத்துக்களுக்கு உரை:

த் - ஏழாவது மெய். அறிவின் எல்லையைக் குறிக்கும்.
ம் - பத்தாவது மெய். ஞானத்தின் படியைக் குறிக்கும்.
ழ் - பதினைந்தாவது இயற்கையுண்மைச் சிற்ப்பியல் அக்கரம். நம் அண்டத்தைக் குறிக்கும்.

எல்லா மொழிகளுக்கும் பிதுர் (தந்தை) மொழியென்று ஆன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமையென்று நிறுத்தம் சிந்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் தான் இயற்கையான சிறப்பியல் மொழியாகும்.

இவ்வாறு இராமலிங்க அடியகளார் கூறுவதைப் போல் சுருக்கமாகச் சொல்வதானால் "தமிழ் மொழியே அதி சுலபமாக சுத்த சிவானு பூதியைக் கொடுக்க வல்லது".