கடல் சீற்றத்தால் லெமோரியா கண்டம் அழிந்த பொழுதுதான் இமயமலையும் கங்கைச் சமவெளியும் நிலப்பரப்பிற்கு வந்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் கடல் தாக்கத்திலிருந்து தப்பி பிழைத்த மக்கள் வடக்கு நோக்கி குடிபெயர்ந்திருக்க வேண்டும். அப்படி குடிபெயர்ந்து வாழ்ந்த மக்களின் நாகரீக சுவடுகள் தான் சிந்து சமவெளி நாகரீகம் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். வரலாற்று அறிஞர்களை வியப்பிலும் திகப்பிலும் ஆழ்த்தக்கூடிய பல பொருட்கள் சிந்து சமவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து வழி முழுவதும் பரவி இருந்த ஒரு பெரும் நாகரீகத்தின் சின்னங்களாக அவைகள் இன்று நமக்கு காட்சி தருகின்றன. மொகஞ்சதரோ, ஹராப்பா ஆகிய இரு புதை நகரங்களிலும் காணப்படும் கட்டடங்களின் அமைப்பும் நகரங்களின் வடிவமைப்பும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அந்த காலத்தில் மொகஞ்சதரோ வளமையான நகரமாக விளங்கியதாகவும் பெரும் வெள்ளத்தினால் அந்நகரம் ஏழுமுறை தாக்கப்பட்டு மண்மூடிப் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
மொகஞ்சதரோவிலும் ஹராப்பாவிலும் ஊருக்கு வெளியே கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன அக்கோட்டைகள் மன்னர்களின் அரண்மனைகளாகவும் படைவீரர்களின் பாடிவீடுகளாகவும் பயிற்சி கூடங்களாகவும் இருந்திருக்க வேண்டும். அவைகளில் பெரிய பெரிய நீச்சல் குளங்களும் நேரான சாலைகளும், நெற்களஞ்சியங்களும் அமைக்கப்பட்டிருந்தன. மத குருமார்களுக்கு தனிதனி குடியிறுப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அந்நகர மக்கள் அழகான மண்பாண்டங்களும் பொம்மைகளும் வெண்கல சிலைகளும் செய்ய கற்றிருந்திருக்கின்றனர்.
செப்பேடுகள் எழுதும் பழக்கமும் அவர்களிடம் இருந்திருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்திய நாணயங்களிலும் சில பட்டையங்களிலும் சில பாத்திரங்களிலும் இந்து கடவுள்களின் உருவங்கள் செதுக்கப்பட்ட முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிந்து வழி எழுத்துக்களில் அடிக்கடி ஒரு குறி வருகிறது மூடியில்லாத மண்பாண்டத்தை போன்று அந்த குறி வரையப்பட்டுள்ளது. அது அரசமரத்தை குறிப்பிடுவதாக சில அறிஞர்கள் குறிப்பாக ரஷ்யாவை சேர்ந்த ஆய்வு குழவினர் கூறுகிறார்கள். இது அரசமரத்தை காட்டும் குறியல்ல மரக்கலத்தை அதாவது படகை சுட்டிக்காட்டும் குறியென்று பின்லாந்து நாட்டை சேர்ந்த அறிஞர்கள் கருதுகிறார்கள். அந்த குறியீட்டை நாம் நேரடியாக பார்க்கும் பொழுது அரச மரத்தை காட்டும் குறியாகவே அது இருக்க வேண்டும் என்று தோன்றுகிறதே தவிர மரக்கலத்தை காட்டுவதாக தோன்றவில்லை.
சிந்து வழி நாகரீகத்தில் முன்னூறு வகையான எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. அதில் ஒரு எழுத்துக்கு கூட இன்று வரை அர்த்தம் கண்டுபிடிக்கபடவில்லை இந்த எழுத்துகள் தவிர பல வித சித்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த சித்திரங்களில் பெருவாரியானவைகள் விலங்குகளும் ஆயுதங்களும் தெய்வங்களும் மனிதர்களும் ஆகும். அந்த விலங்கு சித்திரங்களை பார்ப்பவர்கள் வேதத்தில் குறிப்பிடும் யாகங்களில் பலியிடப்படும் விலங்குகளை காட்டுவதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த கூற்றில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.
காரணம் என்னவென்றால் யானைகளும் காண்டாமிருகங்களும் அந்த ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளன. எந்த சூழலிலும் இத்தகைய மிருகங்களை வேள்விகளில் பலியிடப்பட்டதாக வேதத்தில் எந்த குறிப்பும் கிடையாது எனவே இந்த முத்திரை சித்திரங்கள் நிச்சயமாக வேதங்களை சார்ந்தது அல்ல என்று துணிந்து கூறலாம். இது மட்டும் அல்ல இந்த சித்தரங்களில் வேதங்களில் குறிப்பிடப்படும் தெய்வ உருவங்கள் எதுவுமே வரையப்படவில்லை.
மேலும் அந்நகர சுவடுகளில் கிடைக்கும் எல்லாவகையான சமயச்சார்புடைய ஆதாரங்களை திரட்டி பார்க்கும் பொழுது சிந்துவெளி மக்களின் சமய வாழ்க்கைகும் வேதங்களில் குறிப்பிடப்படும் சமய வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக கருதமுடியாது. ஒன்று அந்த மக்கள் வேதம் சாராத வழிபாட்டை கொண்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது வேதகாலத்திற்கு முற்பட்ட சமயநெறியை கொண்டவர்களாக இருக்க வேண்டும்