செவ்வாய், 13 மே, 2014

மூச்சுப் பயிற்சி :


நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி, ஓகப்பயிற்சி, தியானம் முதலியன செய்வது உடல்நலத்திற்கு உதவக்கூடியன. மூச்சுமருத்துவம் என்பது “மோக்சா” மருத்துவம் எனச் சீனாவில் வழங்குகிறது. மூச்சுப் பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களும், முறைப்படி பிரணாயாமம் ஆசனம் முதலியன தெரியாதவர்களும், உடல்நலம் இல்லாதவர்களும் கூட செய்யத்தக்க மூச்சுப்பயிற்சி : நல்ல காற்று வீசுகிற ஓரிடத்தில் நிமிர்ந்து அமரவும். வாயை நன்கு மூடிக்கொள்ளவும். வாய்க்குள் நாக்கை கீழ்அண்ணத்துடன் அழுத்தி வைத்துக் கொள்ளவும். கண்ணை மூடிக்கொள்ளவும். மூக்கால் மூச்சை நன்கு உள் இழுக்கவும். சில நொடிகள் உள் வைத்திருக்கவும் பின் இழுத்த நேரத்தைவிட அதிகமாக மூச்சை மிக மென்மையாக வெளியே விடவும். இப்படி 30 முறை செய்யவும். நாள்தோறும் காலை மாலை இந்த மூச்சுப் பயிற்சி செய்தால் நோய்கள் வருவதைத் தடுக்கலாம்