சனி, 10 மே, 2014

முத்தமிழ் மொழியில் அருளிய இந்துவேதத்தின் சிறப்புகள்


********************************************
'ஆதிசிவனார் தெய்வீகச் செம்மொழியுமான தமிழ் மொழியில் அருளிய இந்துவேதம் தான் காலங்கள் தோறும் கடவுள்களாலேயே தேவைக்கேற்ப விளக்கங்களும் விரிவுரைகளும் வழங்கப் படுகின்ற ஒரே ஒரு வேதம்'.
நமது இந்துவேதம்தான் அருளுலகையும் பொருளுலகையும் நேரடியாக இணைத்துத் தருகின்ற ஒரே ஒரு வேதம்.
நமது இந்துவேதம்தான் இந்த மண்ணுலகில் தோன்றக் கூடிய அனைத்து வகைப்பட்ட இனத்தவருக்கும், மொழியாளருக்கும், நாட்டவருக்குமுரிய பொதுவேதம்.
நமது இந்துவேதம்தான், இம்மண்ணுலகில் பல்வேறு இனத்து மக்கள் இயற்கையாகத் தோன்றியது போலவே காற்று, கருப்பு, பேய், பிசாசு எனும் நான்கு வகைப்பட்ட கட்டுப்பாடற்ற, காட்டாற்றுப் போக்குடைய முரட்டுத்தனமான அருளுலகத்தவர்களும்; குடும்ப ஆண்டவர், குல தெய்வம், கிராமதேவர் தேவதை, நாட்டுக்கடவுள் எனும் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட மெல்லிய அருவியின் போக்குடைய, பண்பட்ட, நன்மை தரக் கூடிய அருளுலகத்தவர்களும் தோன்றினார்கள்;
எனவே, அருளுலகத்தவர்களுக்கும், பொருளுலகத்தவர்களுக்குமிடையே நட்பும், தோழமையும், சமத்துவமும்தான் உண்டே தவிர; யாரும் யாருக்கும் தலைவரோ, எசமானரோ, முதலாளியோ, அதிபதியோ இல்லை என்று மிகத் தெளிவாகக் கூறுகிறது.
நமது இந்துவேதம்தான், அருளுலகத்தவர்கள் பொருளுலகத்தவர்களுக்கு உதவி செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து; பொருளுலகத்தவர்கள், அருளுலகத்தவர்கள் வாழ்வதற்குரிய வாழிடங்களாக
- நூற்றுத் தொண்ணூற்றிரண்டு வகைப்பட்ட உண்–ழிகள், (இருக்கைகள், அமளிகைகள், திருவடிகள்)
- நாற்பத்தெட்டு வகைப்பட்ட கோயில்கள்,
- நாற்பத்தெட்டு வகைப்பட்ட கருவறைகள்,
- நாற்பத்தெட்டு வகைப்பட்ட வெட்டவெளிக் கருவறைகள்,
- நாற்பத்தெட்டு வகைப்பட்ட வழிபாட்டு நிலையக் கருவறைகள்,
- நாற்பத்தெட்டு வகைப்பட்ட கோயில் மூலக் கருவறைகள்
என்று வகைவகையான அருளுலகத்தவர் வாழிடங்களை அமைக்கக் கூடிய வேத ஆகம விதிமுறைகளை வழங்குகின்ற ஒரே வேதம்.
ஏனென்றால், இதுபோல் எந்த வேதத்திலும், எந்த மதத்திலும் எட்டு வகைப்பட்ட அருளுலகத்தவர்களும் வாழுவதற்குரிய வாழிடங்களின் வகைகளை நூற்றுக் கணக்கில் அறிவிக்கவில்லை, அறிவிக்கவில்லை, அறிவிக்கவில்லை, அறிவிக்கவேயில்லை; அறிவிக்க முடியாது, அறிவிக்க முடியாது, அறிவிக்க முடியாது, அறிவிக்கவே முடியாது என்பதுதான் உண்மை.
எனவேதான், இந்த உலகுக்கு நிலையான நன்மையைத் தரக்கூடிய உண்மையான வேதம் இந்துவேதம்தான் என்றும்;
கோடிக்கணக்கான கடவுளர்கள் பற்றிய உண்மைகளைக் கூறக்கூடிய ஒரே வேதம் இந்துவேதம்தான் என்றும்;
கடவுள்களை வரவழைப்பதற்கும், மனிதர்கள் கடவுள்களை மனிதர்களாக பிறப்பெடுப்பதற்கும், மனிதர்களை கடவுள்களாக மாற்றுவதற்கும் உரிய வழிவகைகளை எண்ணற்றுத் தருகிற ஒரே வேதம் இந்துவேதம்தான் என்றும்,
இந்த உலகில் தோன்றக்கூடிய அனைத்து வேதங்களுக்கும் மூலமாக, முதலாக, தாயாக, கருவாக, உயிராக, உள்ளீடாக இருப்பது இந்துவேதம்தான் என்றும்;
இந்த மண்ணுலகில் எத்தனை மதங்கள் தோன்றினாலும் சரி, அத்தனை மதங்களுக்குமுரிய மூலக்கோயில்களை உருவாக்கிக் கொடுத்துள்ள பெருமைக்குரிய வேதம் இந்துவேதம்தான் என்றும்,
கடவுள்களை நேரடியாகச் சந்தித்திட்ட, சந்தித்திருக்கின்ற, சந்தித்திடக்கூடிய அருளாளர்களை உடைய ஒரே வேதம் இந்துவேதம்தான் என்றும்,
அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்கள் கூறுகிறார்கள். அதாவது, இந்த மண்ணுலகில் எத்தனை எத்தனை வேதங்களைத் தோற்றுவிக்கின்ற அருளாளர்கள் தோன்றினாலும் அவர்களால் கடவுளைச் சந்திக்க முடியாது, முடியாது, முடியாது, முடியவே முடியாது என்று கூறுகின்ற ஒரே ஒரு வேதம் -தெய்வீகச் செம்மொழியுமான முத்தமிழ் மொழியில் ஆதிசிவனார் அருளிய இந்துவேதம்தான்.