செவ்வாய், 13 மே, 2014

மூலம் :


வாழைப்பழம், திராட்சைப்பழம், முலாம் பழம், நார்ப்பொருள் உள்ள காய்கறிகள் சாப்பிடுக. மூலநோய் வராமல் தடுக்கத் தர்ப்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

மலைவாழைப்பழத்தைத் துண்டுகளாக்கி விளக்கெண்ணெயில் ஊற வைத்து, இரவு நாள்தோறும் படுக்கும் முன் ஒரு துண்டும், கடுக்காய் இளகியம் சுண்டைக்காய் அளவும் சாப்பிட்டு மலச் சிக்கல் இல்லாமல் காத்துக் கொள்க.


கற்றாழை தோல்சீவி துண்டுகளாக்கி 3 முறை கழுவி சாப்பிடுக.
வில்வாதி இளகியம் (இலேகியம்) அல்லது கருணைக் கிழங்கு இளகியம் மூல நோய் போக்கும்.
ஒல்லியல் (ஒமியோபதி) மருந்துவத்தில்: காலையில் சல்பர் 30, நண்பகல் ஏஸ்குலஸ் 6 , இரவு படுக்கும் முன் நக்ஸ் வாமிகா30 தொடர்ந்து சாப்பிட எவ்வகை மூலமும் சரியாகிவிடும்.